கடைசி நேரத்தில் பெட்டியை தூக்கிய அந்த நபர்? இதற்குத்தான் இப்படி ஒரு ஏற்பாடா? ரசிகர்கள் கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 102 வது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே முதல் முறை வைத்த பணமூட்டையை கதிரவன் எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில் இந்த முறை பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறுவது அமுதவாணன் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பணப்பெட்டி டாஸ்க்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த பணப்பெட்டி தற்போது இரண்டாவது முறையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த டாஸ்க் தொடங்குவதற்கு முன்பு இதை குறிப்பிட்ட தொகை வந்தவுடன் நான் எடுத்து விடுவேன் என்று அசீம் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அந்த முடிவிலிருந்து அவர் மாறி இருந்தார். ஆனால் மணிகண்டன் மற்றும் கதிரவன் இருவரும் ஆரம்பத்திலிருந்து இதற்காக பிளான் போட்டுக் கொண்டிருந்தனர்.

எதிர்பார்க்காத கதிரவனின் செயல்
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பண மூட்டை வைக்கப்பட்டிருந்தது. அதில் மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே வைக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பலரும் தடுத்தாலும் கேட்காமல் கதிரவன் எடுத்து விட்டார். இதை இவர் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அதனால் ரசிகர்கள் கதிரவனுடைய முடிவை குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். சிலர் அதை பாராட்டவும் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இது யார் எடுப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

அமுதவாணனின் முடிவு
ஏற்கனவே இறுதிக் கட்டத்தில் ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில் கதிரவன் வெளியேறிய பிறகு 5 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது பணப்பெட்டியில் 10 லட்சம் மேலே வந்ததும் நான் தூக்கிக் கொண்டு சென்று விடுவேன் என்று அமுதவாணன் கூறியிருந்தார்
ஆனால் அப்படி செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலர் அமுதவாணனுக்கும் மீதம் இருக்கும் நான்கு போட்டியாளர்களுக்கும் மறைமுகமாக அறிவுரை கூறியிருந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே எவிக்டாகி வெளியே சென்றிருந்த போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்த நிலையில் நேற்று மணிகண்டன், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் மூவரும் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

எதிர்பாராத செயல்
தனலட்சுமி, மணிகண்டனை வெளியேற்றியது அவர்கள் இருவரும் அசீம் மனதை மாற்றி விட கூடும் என்பதற்காக தான் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பிக் பாஸை கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் யாரு எதிர்பார்க்காத வகையில் அமுதவாணன் 10 லட்சம் வந்ததும் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் இப்போ வரைக்கும் 24 மணி நேர எபிசொட்டில் அமுதவாணன் உள்ளே தான் இருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல என்ன வேணாலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் மைனா 10 லட்சம் வந்ததும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் என்ற தகவல்களும் தற்போது பரவி வருகிறது. இதில் எது உண்மை என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications