விக்ரமனை நான் திரும்பி கூட பார்க்கவில்லை... காரணம் இது தான்.. தனலட்சுமி கூறிய வார்த்தை!?

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொள்ளும்போது விக்ரமனை திரும்பி கூட பார்க்கவில்லை என்று தனலட்சுமி கூறியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமனை பற்றி தனலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் பேட்டி கொடுக்கும்போது தன்னிடம் அசீம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி அப்யூஸ் என்று குறிப்பிட்டதாக தனலட்சுமி கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் தான் கலந்து கொண்டிருக்கும்போது அருகிலேயே இருந்த விக்ரமனின் பக்கம் நான் திருப்பி கூட பார்க்கவில்லை என்று தனலட்சுமி கூறியிருக்கிறார்.

முரண்பட்ட பேச்சு

முரண்பட்ட பேச்சு

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு சில வாரங்கள் கடந்த நிலையிலும் இந்த நிகழ்ச்சியை பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். காரணம், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒரு பேச்சும் வெளியே வந்த பிறகு ஒரு பேச்சும் இவர்கள் பேசுவதாக நெட்டிஷன்கள் கலாய்க்கும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது தனலட்சுமி செயல்பாடு அதிகமாக ரசிகர்களின் மத்தியில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆதரவும் வெறுப்பும்

ஆதரவும் வெறுப்பும்

காரணம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது விக்ரமன் தனலட்சுமிக்காக பல்வேறு இடங்களில் சண்டை இட்டு ஆதரவாக இருந்தார். குறிப்பாக தனலட்சுமிக்கு ஆதரவாக பலமுறை அசீமுடன் விக்ரமன் சண்டையிட்டு இருக்கிறார். அதுவும் குறிப்பாக பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமிக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்து குறும்படம் வெளியீட்டு உண்மை நிரூபித்த வரைக்கும் விக்ரமன் தான் இருந்து வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமி ஆரம்பத்தில் கொடுத்த பேட்டியில் கூட தனக்கு அசீம் தான் பிடிக்கும் விக்ரமன் நடிக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

தனலட்சுமியின் குற்றசாட்டு

தனலட்சுமியின் குற்றசாட்டு

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தனலட்சுமி விக்ரமனை புரிந்து கொண்டதாகவும் ஆனால் உங்களை வெளியே நான் வேறு விதமாக பேசியிருந்தேன் என்றும் அப்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளியே வந்திருந்தார். பிறகு தற்போது மீண்டும் விக்ரமனை தொடர்ந்து தாக்கி பேசியிருக்கிறார் என்று விக்ரமனுடைய ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதுவும் தற்போது அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் சேர்ந்து ஃபேன்ஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட போது விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேட்டியில் அசீம் என்னிடம் அப்யூஸ் செய்தார் என்று பேசி இருக்கிறார்.அது தவறு, விளையாட்டில் அசீம் என்னை பிடித்து தள்ளினார் அவ்வளவு தான். அப்படி என்றால் விக்ரமனும் என்னிடம் விளையாட்டில் என் கால்களை பிடித்து வைத்திருந்தார். அப்போ அவரும் அப்யூஸர் தான் என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

திரும்பி கூட பார்க்கவில்லை

திரும்பி கூட பார்க்கவில்லை

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போது என் அருகில்தான் விக்ரமன் உட்கார்ந்து இருந்தார். ஆனால் நான் அவர் இருந்த பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை. ஏன்னா வெளிய வந்த பிறகு அவர் ஒரு கேம் விளையாடுறாரு பாருங்க, அந்த கேமுக்குள்ள போவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அவ்வளவுதான், அதனால்தான் நான், என்று அவர் காட்டிய சைகையை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களாக வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+