தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகியது ஏன்? இதுதான் காரணமா?
தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியிலிருந்து கரு பழனியப்பன் விலகியது ஏன் ?
சென்னை: தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் வெளியேற காரணம் என்ன?
ஜீ தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா எனும் விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து நடத்தி வந்தவர் கரு பழனியப்பன். இவர் பார்த்திபன் கனவு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
இவர் சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் இவர் நடித்தும் உள்ளார். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த தமிழா தமிழா எனும் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வந்தார்.

நீயா நானா
விஜய் டிவியில் வரும் நீயா நானா போல் ஏதாவது ஒரு டாப்பிக்கை எடுத்து அதை ஆதரிப்போர், எதிர்ப்போர் என இரு பிரிவுகளாக பிரித்து தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாதத்தை நடத்தி வந்தார் கரு பழனியப்பன். இவர் திராவிட இயக்க சிந்தனையாளர். கரு பழனியப்பன் தனது நிகழ்ச்சியிலும் திராவிட சிந்தனைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து பேசி வந்தார்.

உறுதி
இந்த நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் கரு பழனியப்பன் தனது ட்விட்டரில் "எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள்!!!

முகம் அறியா தோழமைகள்
இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட "தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...!

சமூக நீதி
சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். கரு பழனியப்பனுக்கு நேற்று பிறந்தநாள்.

சிறந்த பேச்சாளர்
சிறந்த பேச்சாளராக அறியப்படும் கரு பழனியப்பன் திராவிட கருத்துகளை மேடைகளில் பேசி வருகிறார். அவ்வப்போது பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டு பேசுவார். சில நேரங்களில் நடுவராகவும் கலந்து கொண்டு தனது கருத்துகளை இடித்துரைப்பார். இவர் மந்திர புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் காரைக்குடியை சேர்ந்தவர்.

புத்தக பிரியர்
கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்ரன் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பி படிப்பார். சிறு வயது முதலே தனது தந்தையின் மூலம் புத்தகம் படிக்கும் ஆவலை வளர்த்து கொண்டார். இவர் இயக்குநர் பார்த்திபனுடன் பணியாற்றியுள்ளார். பார்த்திபன் கனவு திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார். அது போல் சதுரங்கம் படத்திற்காக சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

காமெடி
இவர் டி பிளாக் படத்தில் கல்லூரி ஓனராக நடித்திருந்தார். தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தும் இவருடன் நீயா நானா கோபிநாத்தை வைத்து ஒப்பீடுகளையும் நெட்டிசன்கள் செய்து வந்தனர். அவருடைய கருத்துகளையும் கோபியின் கருத்துகளையும் நெட்டிசன்கள் விவாதப்பொருளாக முன் வைப்பதும் உண்டு. தற்போது இவர் தமிழா தமிழாவிலிருந்து விலகுவதால் இவருக்கு பதில் யார் இந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இந்த நிகழ்ச்சியை காமெடியாகவும் நடத்தி வந்த நிலையில் நிகழ்ச்சியின் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications