பச்சை குத்தின உடம்பு.. பார்த்தால் அமுல்பேபி அமீர்கான்.. ரூ.1000 கோடி கூலி கனவு காத்துல கரைஞ்சிடுமா
சென்னை: ரஜினிகாந்த் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் வெளிவந்துள்ள படம் கூலி.. இந்த படத்தின் டாக் இன்னமும் சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.. கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூலி படம் குறித்த தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார். இதில் ரஜினிகாந்த், சௌபின் குறித்து பெரிதும் பாராட்டி பேசியிருக்கிறார்.
Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "சௌபின், நாகார்ஜுனா, உபேந்திரா, ரஜினி, அமீர்கான், சத்யராஜ் என ஒவ்வொரு நடிகர்களையும் காட்டும்போதும், பிஜிஎம் தனித்தனியாக இசையமைத்துள்ளார் அனிருத்.. மெனக்கெட்டு உழைத்துள்ளார் அனிருத்..

சில பேர் படத்தில் தொய்வு இருப்பதாக சொல்கிறார்கள்.. அப்படி எங்குமே இல்லை.. இரண்டே முக்கால் மணி நேரம் என்பதால் அப்படி தொய்வு இருப்பதாக தோன்றலாம்.. எனக்கு அப்படி தெரியவில்லை. கூலி படத்தில் குறையை சொல்லியாக வேண்டும் என்றால், பிளாஷ் பேக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம்.
உடம்பெல்லாம் பச்சை குத்தி
ஒருசில காட்சிகள் வசனத்திலேயே முடிந்துவிடுகிறது. அதற்கு பதிலாக பிளாஷ்பேக் காட்சியாக காட்டப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
அதேபோல அமீர்கான் ஒரு வில்லனாக, காமெடியனாக தெரிகிறார்..உடம்பெல்லாம் டாட்டூ குத்திக்கொண்டு வந்தாலும், ஜிம் பாடியுடன் வந்தாம், மீசையை முறுக்கிவிட்டு வந்தாலும், முகம் மட்டும் அமுல்பேபியாகவே இருக்கிறது.. அத்தனை டாட்டூக்களை பார்த்தால், உடம்பு முழுக்க பெயிண்ட் அடித்து கொண்டு வந்து நிற்க வைப்பது போல உள்ளது..
இதுதான் குறையே
இதனை தவிர, படத்தில் பெரிய குறை என்று எதுவுமே இல்லை.. சண்டை காட்சிகளில் மொத்த டீமும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.. ஜெயிலர் பட காட்சிகளை காட்டிலும் இந்த படத்தில் சண்டை காட்சிகள் அபாரமாக இருக்கிறது.. அனைவருமே சண்டை காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.. இது ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்தான்..
கூலி படம் 100 சதவீதம் பிளாக் பஸ்டர்தான்.. 1000 கோடியை இந்த படத்தில் எடுத்துவிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றே நினைக்கிறேன். இன்று, நாளை விடுமுறை என்பதால், மக்கள் அதிகமாக வந்து படத்தை பார்ப்பார்கள்.. இதுபோக ரிப்பீடட் ஆடியன்ஸ் நிறைய பேர் வருவார்கள்.. எனவே வசூல் அதிகமாகும் என்றே தெரிகிறது.
ரகுவரன் இல்லாத குறை
ரகுவரன் இல்லாத குறையை நாகார்ஜூனா போக்குவது போல இருக்கிறது.. ரகுவரனின் குரல் மட்டும்தான் இல்லை.. மற்றபடி தோற்றம், பாடிலேங்குவேஜ் எல்லாமே சூப்பராக இருக்கிறது.. இனிமேல் அடுத்து வரக்கூடிய படங்களில் வில்லனாகவே நடிக்கக்கூடிய வாய்ப்பும் நாகார்ஜுனாவுக்கு உள்ளது.
உபேந்திராவுக்கு பில்டப் அதிகமாக இருக்கிறது.. அவரை பற்றி அதிகமாக பேசுகிறார்களே தவிர, கேரக்டரை பில்டப் செய்யவில்லை.. காஸ்ட்டியூமைகூட உபேந்திராவுக்கு இன்னும் பில்டப் செய்திருக்கலாம். சண்டைக்காட்சியும் வேற லெவலுக்கு செய்திருக்கலாம். அதேபோல அமீர்கானையும் சண்டை காட்சியில் வீழ்த்துவதுபோல காட்டியிருக்கலாம்.
பின்னியெடுக்கிறார் சௌபின்
ஸ்ருதி ஹாசனுக்கு இந்த படத்தில் நல்ல ரோல் தரப்பட்டுள்ளது.. சிறப்பாகவே நடித்திருக்கிறார். ரஜினி, சௌபினுக்கு அடுத்து முக்கிய கேரக்டர் ஸ்ருதி ஹாசனுக்குதான்.. மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது, இதில் ஸ்ருதி ஹாசனுக்கு நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
மொத்தத்தில் படம் முடிவில் மனதில் நிற்பவர்கள் ரஜினியும், சௌபினும்தான்..நடிப்பில் பின்னியெடுக்கிறார் சௌபின்.. இந்த படத்தை என்ஜாய் செய்து நடித்திருப்பதாகவே தெரிகிறது.
விஜய் ரசிகர்கள் சிலர் வேண்டுமென்றே, இந்த கூலி படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் தருவதாக சொல்கிறார்கள்.. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. அப்படியே யார் நெகட்டிவ் ரிவ்யூ தந்தாலும், நல்ல படம் ஓடாமல் போகாது.












Click it and Unblock the Notifications