சௌந்தர்யாவின் 6 ஏக்கர் நிலம்.. மோகன் பாபு கண்ணை உறுத்தியதா? இதோ இந்த 2 விஷயம் "இடிக்குதே".. பிரபலம்
சென்னை: சவுந்தர்யா நடிகை என்பதால், 20 வருடங்கள் கழித்து இந்த விஷயம் இப்போது வெளியே வந்துள்ளது.. இதுவே சாதாரண மனிதர்கள் என்றால், எந்த காலத்திலும் வெளியே வராது.. சவுந்தர்யாவின் வழக்கு விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.. இன்னும் பல ஆக்கிரமிப்புகள் வெளியே வரும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
Realone Media யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "பொதுவாக நடிகைகளுக்கே உள்ள பொதுவான பிரச்சனை என்னவென்றால், கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துவிட்டு, அதை பாதுகாப்பாக வைக்க முடிவதில்லை.. சொந்த அம்மா, அப்பாவாலேயே பிரச்சனை வந்துவிடுகிறது. சொந்த பெற்றோர் மீதே வழக்கு போட்ட நடிகைகளும் பலர் இங்கு உண்டு. இதுபோன்ற பிஸியான நடிகைகள், தங்கள் குடும்பத்தை அல்லது மேனேஜனர்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது..

மற்றொருபுறம், இதுபோன்ற உறவுகள் யாருமில்லாமல் தனித்து வாழக்கூடிய பல நடிகைகளுக்கு, அரசியல்வாதிகள் அல்லது சக்தி வாய்ந்த நபர்களிடமிருந்து குடைச்சலை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல்தான், பலர், பிரபல நடிகர்களுக்கு 2வது மனைவியாக சென்றுவிடுகிறார்கள்.
சொத்துக்களையும், பணத்தையும் பாதுகாக்க நபர் தேவை என்பதால்தான், மிகப்பெரிய நபர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல் புள்ளிகள் என 2வது மனைவியாக, சில நடிகைகள் சென்றுவிடுகிறார்கள்.
மோகன் பாபு - நிலப்பிரச்சனை
இப்போது சவுந்தர்யாவை பொறுத்தவரை, அவருக்கு 6 ஏக்கர் நிலம் உள்ளது.. இந்த நிலத்தை நடிகர் மோகன் பாபு விலைக்கு கேட்டு அழுத்தம் தருகிறார். ஆனால், சவுந்தர்யா நிலத்தை தரவில்லை. இதற்கு பிறகு, மோகன் பாபு அந்த விஷயத்தை கடந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, இந்த நிலப்பிரச்சனை இவர்களுக்குள் நடந்தது, வெளியில் வேறு யாருக்குமே தெரியாது.
இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜகவில் இணைந்தார் சவுந்தர்யா.. இப்படி கட்சியில் இணையும் பிரபலங்களை, பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்வதும், தங்களுடைய சொத்துக்களை பாதுகாக்க ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைந்து பதவி பெறுவதும் இயல்பான விஷயம். இதுபோன்ற ஒரு முயற்சியை சவுந்தர்யா எடுத்திருக்கலாம் என தெரிகிறது. எப்படியும் சவுந்தர்யாவுக்கு எம்பி சீட் கிடைக்கும் என்று பரவலாக அப்போது பேசப்பட்டது.
6 ஏக்கர் நிலம் - தகராறு
ஆனால், மோகன்பாபுவுக்கும், சவுந்தர்யாவுக்கும் நிலம் பிரச்சனை இருந்து வந்தது இப்போதுதான் தெரியவருகிறது.. 100 மீட்டர் மேலே பறக்கும்போதுதான், ஹெலிகாப்டர் விபத்து நடந்தது. அப்போதே இந்த விபத்து சந்தேகத்துடன் பேசப்பட்டது. ஆனாலும் யாருமே இதை பெரிதாக பேசவில்லை.. பிரச்சார நேரம் என்பதால், இதை கடந்து சென்றுவிட்டார்கள்.
இப்போது சிட்டிமல்லு என்பவர் புகார் தந்துள்ளார்.. இவர்தான் சவுந்தர்யாவின் சொத்துக்களை சட்டப்பூர்வமாக பராமரிப்பவர்.. அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டவர்..
2 விஷயங்கள்
இங்கு 2 விஷயங்களை இப்போது நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. மோகன்பாபுவுக்கு சவுந்தர்யாவின் சகோதரருடனும் நிலத்தகராறு இருந்து வந்திருக்கிறது.. ஆனால், இவர்கள் 2 பேருமே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துள்ளனர்.
அதேபோல, சவுந்தர்யா இறந்ததுமே அந்த 6 ஏக்கர் நிலத்தை, மோகன்பாபு ஆக்கிரமித்து, கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருக்கிறார். நடிகை மரணத்தில் சந்தேகம் நிலவி கொண்டிருக்கிறது என்று தெரிந்தும்கூட, கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருக்கிறார். இதனால் நம்மீது சந்தேகம் திரும்பாதா? என்றுகூட மோகன் பாபு யோசிக்கவிலலை.
10 ஆயிரம் கோடிக்கு சொத்து
மோகன்பாபு பரம்பரை பணக்காரர்.. இன்றைய தேதிக்கு 10 ஆயிரம் கோடிக்கு சொத்து இருக்கிறதாம்.. சவுந்தர்யா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நிலையில், அவரது மகன்களுடன் மோகன்பாபுக்கு சொத்து தகராறு வெடித்துள்ளது. இந் நேரத்தில் மோகன்பாபு பலவீனப்பட்டுள்ளதால்தான், அவர்மீது புகார் தரப்பட்டுள்ளது. ஏனென்றால், புகார் தருபவருக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு மற்றும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று 2 விதமான விஷயங்கள் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடை கிடைக்காத மரணங்கள்
சில மரணங்களில் கேள்வி கேட்க முடியாது. ஸ்ரீதேவி மரணமும் அப்படித்தான்., விடை கிடைக்கவில்லை.. ஹெலிகாப்டர்களிலுள்ள கருப்பு பெட்டியில் எல்லாமே பதிவாகும் என்பார்கள்.. இதுவரை ஹெலிகாப்டர் விபத்துகளில், கருப்பு பெட்டி தகவல்கள் எதுவுமே அதிகாரப்பூர்வமாக வெளிவந்ததில்லை.
சவுந்தர்யா ஒரு நடிகை என்பதால், 20 வருடங்கள் கழித்து இந்த விஷயம் இப்போது வெளியே வந்துள்ளது.. இதுவே சாதாரண மனிதர்கள் என்றால், எந்த காலத்திலும் வெளியே வராது.. சவுந்தர்யாவின் வழக்கு விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.. இன்னும் பல ஆக்கிரமிப்புகள் புதைந்து கிடக்கின்றன.. அவையும் வெளியே வரும்.. எத்தனை வருடம் ஆனாலும் உண்மைகள் வெளியே வரும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications