பங்ஷனில் களைகட்டிய பிரச்சனைக்கு காரணம் அபிஷேக்கா?? சின்ன பொண்ணா??
சென்னை: மரியாதை தரவில்லை என்று தொடங்கிய பிரச்சனைக்கு யார் காரணம் என்று ரசிகர்கள் மத்தியில் பட்டிமன்றம் நடக்கிறது.
வயசில் பெரியவர்களுக்கு இந்த மாதிரியா மரியாதை கொடுப்பாங்க என்று ரசிகர்கள் பலர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.
வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்று கூறிக்கொண்டு அபிஷேக் செய்த செயல்தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொண்டாட்டம் தொடங்கியாச்சி
ஃபங்ஷன் என்று சொன்னால் அது வீட்டில் நடந்தாலும் சரி வெளியில் நடந்தாலும் சரி அங்கே ஒரு பிரச்சனை தொடங்கி விடும் என்பதே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நிரூபித்து இரக்கின்றனர். பிரச்சனைகள் வந்தால் தான் அங்கே கலவரமும், கலகலப்பும் கூடும் என்பது உண்மைதான் போல. ஆனால் கலகலப்பு ஜாலியாக முடிந்தாலும் இதற்குப் பின்பு என்ன மாதிரி கலவரம் ஏற்பட போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பிரச்சனையை தொடங்கியது யார் என்பதைப்பற்றி பலர் அபிஷேக் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இது அபிஷேக் வேலை தானா
நியாயம் பேசுகிறேன் என்று எப்போதும் அடுத்தவர்களின் பிரச்சனையில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கும் அபிஷேக் செய்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் தன்னுடைய கேரக்டர் அங்கே நிறைந்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக கையாண்டு வருகிறார் என்று ரசிகர்கள குற்றம் சாட்டி வருகின்றனர். எல்லா இடங்களிலும் நியாயம் பேசும் இவர் செய்த செயல் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன தான் இவர்கள் ட்ராமா நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாலும் இந்த மாதிரி வயதில் மூத்தவர்களை மரியாதை இல்லாமல் செய்யக் கடாது என்று பலர் கூறி வருகின்றனர்.
Recommended Video

விஜயதசமி ட்ராமா
இன்றைய எபிசோட்டில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜைக்காக சிறப்பு எபிசோடுகள் கலக்கலாக இருந்தது. இதற்காக ட்ராமா போட்டு ரசிகர்களை என்டர்டைன்மென்ட் பண்ணிக் கொண்டிருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருகட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தி கச்சேரியை கதிகலங்க வைத்து விட்டனர். ஒருபுறம் கச்சேரி நடந்து கொண்டிருக்கும்போது, மறுபுறம் சின்னப்பொண்ணு டக்கென்று கோபப்பட்டு விட்டார். அதற்கு காரணம் அபிஷேக்கா அல்லது பிரியங்காவா என்று தெரியாமல் அவரே கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டார். ஆனாலும் பிரியங்கா என்னை இப்படி அசிங்கப் படுத்தி விட்டார் என்று கூறி கொண்டிருந்த சின்னப்பொண்ணு பிரியங்கா வந்ததும் அபிஷேக் செய்தது தவறு என்று குழப்பத்தோடு கூறியிருக்கிறார். இதுதான் ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது என்னதான் நடக்கிறது என்று பலர் கேட்டு வருகின்றனர்.

தொடங்கியது பட்டிமன்றம்
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு சின்ன பொண்ணுதான் முதல் பாடலை அதுவும் விநாயகர் பாடலை பாடவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் அடுத்ததாக அவர் வருவார் என்று சின்னப்பொண்ணுவின் பெயரை சொல்லாமல் பிரியங்கா இதோடு நான் முடித்துக்கொள்கிறேன் இனி அபிஷேக் தொடர்வார் என்று பொறுப்பை ஒப்படைத்து தான் பெரிய கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் பிரச்சனைகள் பெரியதாக அவர்களுக்குள்ளே மோதிக்கொண்டு இருந்தாலும் மனதிற்குள் இருக்கும் மனக் கசப்புகளை பூட்டிவிட்டு டிராமாவில் கவனத்தை செலுத்தி விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் தான் இதில் யார் மீது தப்பு என்று பட்டிமன்றத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications