சட்டுபுட்டுனு சமையலில் அசத்தும் ஜெனியை தெரியுமா? இவருடைய வாழ்க்கையில் இத்தனை சோதனைகளா?
சென்னை: காலை வேளையில் டக்கு டக்கு என பல சமையல்களை செய்து பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் ஜெனி சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர்.
இன்று பலருக்கும் ரோல் மாடலாக சமையலிலும் தன்னம்பிக்கையிலும் இருந்து வரும் இவர் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
விதவிதமாக பிரியாணி செய்து பலரையும் வியக்க வைக்கும் ஜெனி ஆரம்பத்தில் செய்த சொதப்பல்கள் குறித்து அதில் பேசியிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தை திருந்தாலே போதும் அங்கே இல்லத்தரசிகள் பலருக்கும் உதவும் வகையில் பல youtube சேனல்களில் சமையல் குறிப்புகள் வலம் பெறுவது வழக்கம்தான். ஆனால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் பல சிங்கிள் பசங்களுக்கும் உதவும் வகையில் சட்டுபுட்டு சமையல் செய்வது எப்படி? இருக்கும் பொருளில் வைத்து விதவிதமாக சாப்பாடுகளை உருவாக்குவது எப்படி? என்று விளக்கம் கொடுக்கும் youtuber ஜெனி பலருக்கும் பரிச்சயமானவர்தான்.
இவர் காலை வேளையில் தன்னுடைய வீட்டில் மலை போல குவிந்து இருக்கும் பாத்திரங்களை அழகாக கழுவி துடைத்து வைத்து சடுகுடுன்னு சமையல் செய்து குட்டியான சமையலறையில் வித்தை செய்வதில் வல்லவராக இருக்கின்றனர். அதனாலேயே இவர் வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களில் லைக்குகள் குவிந்து விடுகிறது. தங்களுக்கு பிடித்த சமையல் செய்து அனுப்பும்படி பலர் கமெண்ட்களில் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து அவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதில் இவருடைய சொந்த ஊர் ரங்கநாதன்புரம் தான் என்று கூறி இருக்கிறார். பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு சந்தோஷமாக இருந்த நிலையில் பிறகு அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு குடி பெயர்ந்து இருக்கிறார்கள். இவருடைய அப்பா பெயிண்டர் ஆக இருந்திருக்கிறார். அவருடைய அம்மா வளையல் கடை வைத்திருக்கிறார். அவருடைய அம்மா தான் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டு இருப்பாராம். இருவரும் வேலைக்கு போயிட்டு 10 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாங்களாம். வந்து தான் இவர்களுக்கு சமையல் செய்து கொடுப்பார்களாம்.
கஷ்டப்பட்ட குடும்பமாக இருந்தாலும் இவருக்கு கஷ்டம் தெரியாமல் தான் இவருடைய பெற்றோர் வளர்த்திருக்கிறார்கள். பிறகு திடீரென்று இவருக்கு 20 வயது இருக்கும்போது இவருடைய தந்தை இறந்து போனாராம். தந்தையின் இறப்பிற்கு பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. வாழ்க்கை இவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு அப்போதுதான் தெரிய ஆரம்பித்தது என்று கூறியிருக்கிறார்.

பிறகு இவருக்கு 22 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு இவருடைய வாழ்க்கையே முழுவதுமாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார். திருமணம் ஆன புதிதில் எனக்கு எப்படி இருக்கணும் எப்படி இருக்க கூடாது என்று கூட தெரியாது. என்னுடைய கணவருக்கு ஊர் திருநெல்வேலி, எனக்கு அப்போது சாப்பாடு செய்ய தெரியாது. எப்படி பேசணும்னு தெரியாது. நான் ஒரு குழந்தை போல தான் இருந்தேன். என்னுடைய கணவர் தான் எனக்கு ஒன்று ஒன்றாக கற்றுக் கொடுத்தார்.
நான் சட்னி வைக்கும் போது எனக்கு அதை தாளிச்சு ஊத்தணும் என்று தெரியாது. தேங்காய அரைச்சு ஊத்தி கொதிக்க விட்டுட்டேன். அது தண்ணி ஒரு பக்கமும் தேங்காய் ஒரு பக்கமும் பிரிஞ்சு வந்துட்டு. அப்படித்தான் என்னுடைய ஆரம்ப காலம் இருந்தது. அதை மட்டும் அல்லாமல் ஒரு முறை நாங்கள் குடியிருந்த வீட்டில் புதிதாக திருமணம் முடிந்த வீட்டுக்காரங்களோட பொண்ணுக்கு விருந்து வைப்பதற்காக பிரியாணி செஞ்சேன். அப்போ பிரியாணி பொங்கலாக மாறிவிட்டது. பொங்கல் மாதிரி தான் பிரியாணி செஞ்சு வைத்தேன்.
என்னுடைய கணவர் தான் எனக்கு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார். என்னுடைய கணவர் சாப்பாடு பிரியர். அவருடைய அம்மா நல்லா சமைப்பாங்க. அவங்க விதவிதமாக சமைப்பாங்க. எனக்கு சாம்பார் மட்டும் வச்சு சாப்பிட்டு வளர்ந்த குடும்பம். அதனால் எனக்கு பெருசா எதுவும் தெரியாமல் இருக்கும்போது என் கணவர் மாமியாருக்கு போன் போட்டு ஒன்னு ஒன்னா கேட்டு எனக்கு சொல்லுவார். அப்படித்தான் எனக்கு இவ்வளவு ஸ்பீடா சமைக்க வந்ததுக்கு காரணம்.
ஆரம்பத்தில் நான் டெய்லரிங் மட்டும்தான் செய்து கொண்டிருந்தேன். அது மட்டும் தான் எனக்கு பிடித்தது. அப்போது நான் ஸ்பீடா சமையல் செய்கிறேன் என்று என்னுடைய கணவர் தான் youtube ஆரம்பிக்கலாம் என கூறினார். அப்ப கூட இது சரிப்பட்டு வருமா என்று நான் யோசித்தேன். ஆனால் என்னுடைய கணவரின் உதவியால் நான் சமையல் செய்ய ஆரம்பித்தேன். இப்ப கூட அவர் இல்லனா நான் இல்லை. அந்த அளவில்தான் நான் இருக்கிறேன் என்று தன்னுடைய ஆரம்பகால கதையும், காதல் கதையும் கலந்து ஜெனி கூறியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications