ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.. அதுவும் “இருமலர்கள்” அபி முதல் யாரெல்லாம் பாருங்க!
சென்னை: முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் இந்த சேனல் தொடங்கிய காலகட்டத்தில் அதிகமான டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
ஆனால் இப்போது புதியதாக சீரியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தாலும் டப்பிங் சீரியல்கள் வரவில்லை. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஜீ தமிழ் மட்டும் அல்லாமல் கலர்ஸ் தமிழ் பாலிமர் என்று பல சேனல்களில் பல டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பானது.

ஜீ தமிழில் கூட "இனிய இரு மலர்கள்" சீரியல் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்திருக்க முடியாது. அதில் அபி மற்றும் பிரத்யாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுபோல பிரத்யாவின் தங்கை "அம்மு" கேரக்டரில் நடித்த நடிகை "மிருணாள் தாகூர்" அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. அவர் இப்போது வெள்ளித்திரையில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.
காதல் அக்கா தங்கை பாசம் என்று மக்கள் விரும்பும் பல விஷயங்கள் இந்த சீரியலில் இருந்தது. அதனாலேயே இந்த சீரியல் பல வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் எப்போது இது போன்ற சீரியல்கள் இல்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது டப்பிங் சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பாகாத நிலையில் ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது டிவி சேனல், அதன்படி வரும் திங்கள் ( மே 27 ) முதல் மதியம் 3 மணிக்கு "நானே வருவேன்" என்ற டப்பிங் சீரியலும் இரவு 10.30 மணிக்கு "லட்சுமி கல்யாணம்" என்ற சீரியலும் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நானே வருவேன் சீரியல் இந்தியில் ராதா மோகன் ( Pyar Ka Pehla Naam ) என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும், இதில் ஷபீர் நாயகனாக நடிக்க நிஹாரிகா ராய் நாயகியாக நடித்துள்ளார்.
அதே இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள "லட்சுமி கல்யாணம் சீரியல்" ஹிந்தியில்" பாக்கியலட்சுமி" என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும். இதில் "ரோஹித் சுசாந்தி" நாயகனாக நடிக்க "ஐஸ்வர்யா கரே" நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் திங்கள் முதல் இந்த இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications