கெட்டிமேளம்: அடுத்தடுத்த சர்ப்ரைஸ்.. அஞ்சலியை திக்குமுக்காட வைத்த மகேஷ், துளசி சொன்ன வார்த்தை
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் அஞ்சலியை வெளியே அழைத்து செல்ல வெற்றி துளசிக்கு ஏணி போட்டு ஜெகன் வீட்டிற்குள் நுழைய உதவிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, துளசி வீட்டிற்குள் சென்றிருக்க தியா கையில் காயங்களுடன் அழுக்கு துணி மூட்டையை தூக்கி கொண்டு நடக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். தியா துளசியை பார்த்ததும் கட்டியணைத்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக அழுகிறாள்.

வெற்றி உள்ளே போன துளசி இன்னும் வரலையே என்று கேட் அருகே சென்று பார்க்கிறான். மறுபக்கம் மகேஷ் அஞ்சலியின் கண்ணை கட்டி விட்டு பிரைவேட் ஜெட்டில் அழைத்து சென்று கண்ணை திறந்து விட்டு சர்ப்ரைஸ் கொடுக்கிறான்.
பிரைவேட் ஜெட்டா.. இதெல்லாம் என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது என சிலாகிக்கிறாள் அஞ்சலி. அடுத்து இங்கே துளசியை பார்த்த ஜெகனின் அம்மா அவளை வெளியே துரத்துகிறாள். வெற்றி எல்லாம் ஓகே வா என்று கேட்க துளசி செய்த உதவிக்கு நன்றி சொல்கிறாள். இனிமே என் பின்னாடி வராதீங்க எனவும் பதில் கொடுக்கிறாள்.

அடுத்ததாக மகேஷ் அஞ்சலியை கடலுக்கு நடுவே கப்பலில் அழைத்து சென்று கேக் கட் செய்ய வைத்து பிறந்த நாளை கொண்டாடுகிறான். மேலும் அடுத்து இன்னொரு இடத்திற்கு அழைத்து வந்து செயற்கை மழையை பொழிய வைத்து அஞ்சலியை சந்தோசப்படுத்துகிறான்.
வீட்டிற்கு வந்த சிவராமன் அஞ்சலி எங்கே என்று கேட்க லட்சுமி தயக்கத்தோடு மகேஷுடன் அனுப்பி வைத்த விஷயத்தை சொல்ல சிவராமன் என்னமோ பொண்ணு தனியா இருப்பான்னு நேத்து பீல் பண்ண.. இன்னைக்கு மாப்பிளையோட அனுப்பி வச்சிருக்க என்று கலாய்க்கிறார்.
பிறகு மகேஷ் அஞ்சலிக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து அடுத்த சர்ப்ரைஸை கொடுக்கிறான். ஹோட்டலுக்கு அழைத்து அஞ்சலிக்கு பிடித்த உணவுகள் எல்லாவற்றையும் ஆர்டர் செய்து அங்கும் அசத்துகிறான். அஞ்சலி அப்படியே அவனது அடுத்தடுத்த சர்ப்ரைஸில் மெய் சிலிர்த்து நிற்கிறாள்.

இதை தொடர்ந்து கவினின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து வரதராஜிடம் கவின் காலேஜ் வரல அதான் பார்க்க வந்ததாக உண்மையை உளற போக கவினின் அம்மா சமாளித்து அவர்களை கவின் ரூமுக்கு அனுப்பி வைக்கிறாள். நண்பர்கள் வா அஞ்சலி வீட்டிற்கு போய் பேசலாம் என அழைக்க கவினின் அம்மா இந்த விஷயத்தில் மட்டும் அவனை விட்டுடுங்க வேண்டாம்.. காதலால் எங்க குடும்பத்தில் நடந்ததெல்லாம் போதும் என எமோஷனலாக பேசுகிறாள்.
அடுத்து மகேஷ் 9 மணி ஆனதும் அஞ்சலியை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். கவின் அஞ்சலி யாரையோ ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும் என நண்பர்களை அனுப்பி வைக்கின்றான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications