கெட்டி மேளம்: துளசிக்கு வந்த புது பிரச்சனை.. மகேஷ் அஞ்சலி குடும்பத்திற்கு கொடுத்த அதிர்ச்சி
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் லாயர் வீட்டுக்கு வந்ததால் தியாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வது போல ஜெகன் குடும்பம் நாடகம் போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அஞ்சலி மகேஷூடன் மெசேஜில் பேசிக் கொண்டிருக்க அப்போது துளசி உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா மாப்பிள்ளை நல்லவரா இருக்காரா? என்று கேட்க அஞ்சலி எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றாரு பிடிக்காமல் இருக்குமா என்று சொல்கிறாள்.

மேலும் காலேஜ்ல எல்லாருக்கும் கல்யாணம் குறித்து சொல்லணும் இந்த கவின் பையன் தான் போனையும் எடுக்க மாட்டான் மெசேஜும் பண்ண மாட்டேங்குறான் என்று திட்டுகிறாள். மறுபக்கம் அஞ்சலியின் நினைவால் தவிக்கும் கவின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயல அவனது அம்மா தடுத்து நிறுத்தி எமோஷனலாக பேசுகிறாள்.
இங்கே ஜெகன் வீட்டில் அவனது அம்மா போன் பேசிக் கொண்டிருக்க அப்போது தியா யாருக்கும் தெரியாமல் தப்பி வெளியே வந்து விடுகிறாள். துளசி அம்மாவை பார்க்கணும் என்னை துளசி அம்மா கிட்ட கூட்டிட்டு போங்க என்று வழியில் ஒரு சிலரிடம் கேட்க யாரும் உதவ முன் வரவில்லை.

தியா காணாமல் போன விஷயம் அறிந்து ஜெகன் மற்றும் மோனிகா என இருவரும் சிவராமன் வீட்டுக்கு வந்து சத்தம் போட துளசி பதறிப் போகிறாள். தியாவை நினைத்து கண்கலங்கி அழுகிறாள்.
இந்த சமயத்தில் தியா துளசிக்காக காத்திருக்கும் வெற்றியை பார்த்து அவனிடம் உதவி கேட்க வெற்றி யார் துளசி அந்த போட்டோ இருக்கா அவங்க போன் நம்பர் தெரியுமா என விசாரிக்க தியா போன் நம்பர் தெரியும் என்று சொல்கிறான். உடனே துளசிக்கு போன் போட்டு கொடுக்க தியா துளசியம்மா எனக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கல.. சாப்பாடு கூட கொடுக்க மாட்டாங்க நான் சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு என்று சொல்கிறாள்.

இதைக் கேட்டு துளசி கண்கலங்கி பேச தியா வெற்றியிடம் போனை கொடுக்க இங்கே மோனிகா துளசியிடமிருந்து போன் பிடுங்கி நான் தான் துளசி நீங்க எங்க இருக்கீங்க என்று முகவரியை கேட்டு தெரிந்து கொள்கிறாள். பிறகு துளசி வீட்டில் இருந்து ஜெகன் மற்றும் மோனிகா கிளம்பி வருகின்றனர்.
துளசி மீண்டும் வெற்றிக்கு போன் போட்டு குழந்தைக்கு சாப்பாடு மட்டும் வாங்கி கொடுங்க நான் உங்களுக்கு காசு கூட கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்ச வெற்றி தியாவை அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கி கொடுக்கிறான். தியா சாப்பிடுவதை வீடியோ காலில் அவன் முகத்தை காட்டாமல் காட்டுகிறான். அதன் பிறகு ஜெகன் மற்றும் மோனிகா அங்கு வந்து தியாவை தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications