கெட்டிமேளம்: அஞ்சலி கல்யாணத்தை நிறுத்த கிளம்பிய கவின்.. அப்பாவிடம் கோபப்படும் வெற்றி, நடக்க போவது?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அஞ்சலி மற்றும் மகேஷ் என இருவருக்கும் நலங்கு வைக்கின்றனர், தீபாவின் அம்மா அவளிடம் உனக்கும் இப்படியெல்லாம் செய்து பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை என் வருந்துகிறாள்.

இதனை தொடர்ந்து மகேஷ் அஞ்சலியை கூப்பிட்டு இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மூமென்ட்.. அதனால் போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று சொல்லி அஞ்சலியுடன் சேர்ந்து போட்டோக்களை எடுத்து கொள்ள இதை பார்த்து துளசி ஆகியோர் கலாய்க்கின்றனர்.
மறுபக்கம் வெற்றி தலைவலிக்குது காபி போட்டு கொடு என்று அம்மாவை தேட அண்ணி மீனாட்சி கல்யாணத்திற்கு சென்றிருக்கும் விஷயத்தை போட்டு கொடுக்க வெற்றி என்னை விட உங்களுக்கு அந்த குடும்பம் தான் முக்கியமா போச்சா என்று கோபம் கொள்கிறான். பிறகு வீட்டிற்கு வரும் அவனது அம்மா உன் அக்காவுக்காக தான் போயிட்டு வந்தேன் என்று சொல்கிறாள்.

அடுத்து கவினின் அம்மா ரூமில் கவின் இல்லாத காரணத்தால் அவனுக்கு போன் செய்கிறாள். இங்கே கவினின் நண்பர்கள் வா இப்போவே மண்டபத்திற்கு போய் கல்யாணத்தை நிறுத்தி அஞ்சலியை கூட்டிட்டு வரலாம் என்று ஏத்தி விடுகின்றனர்.
மண்டபத்தில் பாலமுருகன் எல்லாரையும் ஒன்று கூட்டி அஞ்சலி நம்மோட இருக்க போற கடைசி நாள் இன்னைக்கு என்று சொல்லி எமோஷனலாக பேசுகிறான். எல்லாரும் ஒன்றாக நிலா சோறு சாப்பிடலாம் என்று சொல்கிறான். அதே போல் எல்லாரும் ஒன்றாக சாப்பிட மகேஷ் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்கிறான். பாலமுருகன் ராஜா ராணி சிலையை கிப்டாக கொடுத்து ராஜா நீங்க ராணி அஞ்சலி என்று சொல்கிறான்.

கவின் அம்மாவின் போனை எடுத்து கல்யாணத்தை நிறுத்த போவதாகவும் தனக்கு அஞ்சலி வேண்டும் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறான். நண்பர்களுடன் மண்டபத்திற்கும் கிளம்பி வருகிறான். அப்போது அஞ்சலி அம்மாவின் மடியில் படுத்து பீல் செய்ய லட்சுமி பிறந்த வீடு கொஞ்ச நாளைக்கு தான். கடைசி வரைக்கும் புகுந்த வீடு தான் கூட வரும் என்று அட்வைஸ் செய்கிறாள்.
இதையெல்லாம் கவினும் கவின் நண்பர்களும் பார்த்து விட்டு இப்போ நேரம் சரியில்ல, ரெண்டு பெக் போட்டுட்டு வரலாம் என்று கிளம்பி சென்று சரக்கு அடித்து மட்டையாகி விடுகின்றனர். அடுத்த நாள் மேளச்சத்தம் கேட்டு எழுந்து கொள்கின்றனர்.

வெற்றியின் வீட்டில் அவனது பெற்றோர் கல்யாணத்திற்கு ரெடியாக அப்பா வெற்றியையும் கூப்பிட வெற்றி நான் வரல.. எனக்கு அந்த குடும்பத்தை எப்பவும் பிடிக்காது என்று சத்தம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications