Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட்டி மேளம்: சாயா சிங் மீது காதல் கொள்ளும் ஹீரோ.. கதையில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்- இன்றைய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீகாந்த் என இருவரும் உயிர் இழக்க துளசி கல்யாணம் நின்று போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சிவராமன் குடும்பத்தினர் ஸ்ரீகாந்தின் குழந்தை தியாவுடன் வீட்டிற்கு வர சிவராமனின் இரண்டு பிள்ளைகளும் இந்த குழந்தை இங்க இருக்கக்கூடாது ஏற்கனவே ஒரு அனாதை அந்த பாலமுருகனை கூட்டிட்டு வந்தீங்க இப்போ இந்த குழந்தையை கூட்டிட்டு வந்து இருக்கீங்க, இது என்ன வீடா இல்ல அனாதை ஆசிரமமா என்று சத்தம் போடுகின்றனர்.

television sayasingh krishna

சிவராமன் அந்த குழந்தை இங்க தான் இருக்கும் என்று சொல்ல அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். சிவராமனின் தாயார் அந்த சின்ன குழந்தை உங்களை என்ன பண்ணப் போகுது? அது இருக்கிறதுனால உங்களுக்கு என்ன பிரச்சனை என கோபப்படுகிறார். இது என் வீடு.. இங்கே யார் இருக்கணும் இருக்கக்கூடாது என்பதை நான் தான் முடிவு பண்ணனும் அந்த குழந்தை இங்க தான் இருக்கும் என்று உறுதியாக சொல்கிறார்.

television sayasingh krishna

அதைத்தொடர்ந்து தியா அப்பாவும் பாட்டியும் எங்கே என்று கேட்க துளசி அவங்க ரொம்ப தூரம் போயிருக்காங்க திரும்ப வந்துடுவாங்க என்று சொல்லி சமாதானம் செய்கிறாள். மறுபக்கம் எம்எல்ஏ வீட்டிற்கு டாக்டர் மற்றும் போலீஸ் வந்து இருக்கேன் எம்எல்ஏ இந்த ஆக்சிடென்ட் விஷயம் வெளியே தெரியக்கூடாது. அவங்க இறந்துட்டாங்க என்ற விஷயம் வெற்றிக்கு தெரியக்கூடாது அப்படி வெளியே ஏதாவது தெரிஞ்சா வெற்றியோட வாழ்க்கையே போயிடும் அது மட்டும் இல்லாம எங்க அரசியல் வாழ்க்கை மொத்தமா முடிஞ்சு போயிடும் என சொல்கிறார்.

television sayasingh krishna

பிறகு வெற்றி வீட்டுக்கு வர டாக்டரை பார்த்ததும் டாக்டர் உங்கள பாக்கலாம்னு ஹாஸ்பிடல் வரலாம்னு இருந்தேன் அந்த மூணு பேரும் எப்படி இருக்காங்க அவங்க அட்ரஸ் ஏதாவது கொடுங்க நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொல்ல டாக்டர் அவங்க விபத்தில் சிக்கி காயப்பட்டு வந்ததனால எதுவும் கேட்கல முதலுதவி முடிந்ததும் அவங்களும் கிளம்பி போயிட்டாங்க மூணு பேரும் நல்லா இருக்காங்க என்று சொல்லி சமாளிக்கிறார். ஆனால் வெற்றியின் அண்ணி இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து ஏதோ தப்பா இருக்கு என சந்தேகம் கொள்கிறாள்.

television sayasingh krishna

அதைத்தொடர்ந்து மோனிகா தமது கணவனிடம் என் அம்மா என்னை திட்டுவாங்க.. ஆனா அண்ணன் என்ன ஒரு கேள்வி கூட கேட்க மாட்டான். இப்ப யாருமே இல்லாத அனாதை ஆகிட்டேன் என கண் கலங்குகிறாள். மேலும் இது ஆக்சிடென்ட் மாதிரி தெரியல என்று சொன்னது அவளது புருஷன் பயந்து போகிறான். இதை இப்படியே விடக்கூடாது இல்லனா உண்மையை கண்டுபிடித்து விடுவாள் ஏதாவது செய்யணும் என திட்டம் போடுகிறான்.

அடுத்து லட்சுமியின் அண்ணன் வீடு காட்டப்படுகிறது. வரதராஜனின் மனைவி லட்சுமி பொண்ணோட கல்யாணம் நின்னு போச்சு என்று பேச வரதராஜன் அவர்களை பற்றி இங்கே பேசாத என் பிள்ளைக்கு அப்படி ஒருத்தவங்க இருக்கிறது தெரியக்கூடாது என சொல்கிறார். வரதராஜனின் மகன் தான் கவின் என்பது இங்கே தெரிய வருகிறது. கவின் அஞ்சலி தன்னுடைய முறைப்பெண் என்று தெரியாமலேயே அவளை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வருவது தெரிய வருகிறது.

television sayasingh krishna

அடுத்ததாக ஊர் மக்கள் எங்க வீட்டை எல்லாம் இடிக்க புல்டோசனை கொண்டு வந்து இருக்காங்க என்று சொல்லி எம்எல்ஏ வீட்டுக்கு வந்து உதவி கேட்க, வெற்றி வருவான் போங்க என்று சொல்லி அனுப்புகிறார். வெற்றி அங்கு வந்து ஆபீஸரிடம் பேசிப் பார்க்க அவர்கள் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல வெற்றி அவர்களுடன் சண்டை போடுகிறான்.

television sayasingh krishna

அப்போது துளசி மற்றும் பாலமுருகன் என இருவரும் வர வெற்றி சண்டை போடுவதை பார்த்து துளசி இவனை மாதிரி ஆளுங்க எல்லாம் சும்மா விடக்கூடாது என கோபப்படுகிறாள். சண்டை போட்டு முடித்த வெற்றி துளசியை பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் வயப்படுகிறான். ஏற்கனவே வெற்றி ஒரு பொண்ண பார்த்தா முதல் பார்வையில் பிடிக்கணும். அப்படியே வானத்தில் பறக்கணும், பூ மழையா கொட்டணும்.. கெட்டி மேளம் சத்தம் கேக்கணும் என கனவு கண்டு கொண்டிருக்கிறேன் அதேபோல் இவளை பார்த்ததும் அப்படியே பின்னாடி சென்று புல்டோசர் மீது ஏற அப்படியே அவன் மேலே செல்கிறான்.

துளசியை பார்த்து ரசித்தபடியே இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய
கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+