ஜீ தமிழின் புதிய சீரியல் மௌனம் பேசியதே வருகையால்.. டைம் மாறும் பழைய சீரியல் - முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளும் சீரியல்களும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சேனலும் தொடர்ந்து வள்ளியின் வேலன், நெஞ்சத்தை கிள்ளாதே என புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கிய நிலையில் வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் மௌனம் பேசியதே என்ற புத்தம் புதிய சீரியல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் இந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த சீரியலின் ப்ரோமோக்கள் தொடர்ந்து வெவ்வேறு விதமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

television diwali zee tamil

விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும் விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் திருமணம் நடக்க இரண்டு ஜோடியும் ஒரு பேருந்தில் பயணம் செய்ய எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்தில் ஜோடி மாறி வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

television diwali zee tamil

இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் அடுத்து நடக்க போவது என்ன? அவர்கள் சந்திக்க போகும் சவால்கள் என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.

television diwali zee tamil

இந்த மௌனம் பேசியதே சீரியல் என்ட்ரியால் இதுவரை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிப்பரப்பாகி வந்த இதயம் சீரியல் இனி 1:30 மணி முதல் 2 :30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+