கட்டிலில் ஷாக்.. ரூட் மாறிய பெண்ணால், காதலன் எமோஷன்.. 18 வெட்டுக்களாம்.. குளிச்சிட்டு கிளம்பிய கொடுமை

18 இடங்களில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காதலன் இருக்கும்போது, இன்னொரு நபருக்கு வலையை வீசியுள்ளார் விஷ்ணுபிரியா.. கடைசியில் பார்த்தால் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.
கண்ணூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கழுத்து அறுத்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலில் 18 வெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போலீஸ் வீட்டுக்கு செல்லும்போது அவரது கழுத்து தொங்கிய நிலையில் காணப்பட்டது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு அருகே உள்ளது பானூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் வினோத்... வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்..

 பெட்ரூம்

பெட்ரூம்

இவரது மகள் விஷ்ணு பிரியா.. 23 வயதாகிறது.. ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக வேலை பார்த்து வந்தார்.. 2 நாட்களுக்கு முன்பு, மதிய நேரம், வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு பிரியாவை யாரோ கொன்றுவிட்டார்கள்.. பெட்ரூமில், கட்டிலின்மீது கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்... இதையடுத்து, பானூர் போலீசார் விஷ்ணு பிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.

 மாஸ்க் மர்மம்

மாஸ்க் மர்மம்

இதனால், அக்கம்பக்கத்தில் விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போது, அந்த வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.. இதையடுத்து, விஷ்ணு பிரியாவின் செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தினர்.. அந்த செல்போனில் ஷியாம்ஜித் என்ற 23 வயது நபர் சிக்கினார்.. இவர், கூத்துபறம்பு மானந்தேரி பகுதியை சேர்ந்தவராம்.. அவரது வீட்டிற்கே சென்று போலீசார் ஷியாம்ஜித்தை பிடித்து விசாரித்தனர்... அப்போதுதான், விஷ்ணு பிரியாவை கொலை செய்ததை அவரே ஒப்புக்கொண்டார்.

 கட்டிலில் சடலம்

கட்டிலில் சடலம்

இது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "ஷியாம்ஜித் காலேஜ் படித்து முடித்துள்ளாராம்.. அவரது அப்பா, அதே பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்.. அப்பாவுக்கு உதவியாக ஷியாம்ஜித்தும் இருந்து வந்துள்ளார்.. கடந்த 5 வருடங்களாகவே விஷ்ணு பிரியாவை ஷியாம்ஜித் காதலித்து வந்துள்ளார்... ஆனால், விஷ்ணு பிரியாவுக்கு பொன்னானி பகுதியைச் சேர்ந்த வேறொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது... இந்த விஷயம் ஷியாம் ஜித்துக்கு தெரிய வந்ததுமே, காதலர்கள் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 சுத்தியல் + கத்தி

சுத்தியல் + கத்தி

இதன் பிறகு ஷியாம்ஜித்துடன் பேசுவதை விஷ்ணு பிரியா முழுமையாக நிறுத்திவிட்டார்.. தங்கள் காதலுக்கு நடுவில், இன்னொரு நபர் குறுக்கே வந்ததால்தான், விஷ்ணு பிரியா தன்னைவிட்டு பிரிந்துவிட்டதாக ஆத்திரம் கொண்டார் ஷியாம்ஜித்.. அந்த பொன்னானி இளைஞர் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.. எனவே, முதலில் விஷ்ணு பிரியாவையும், அதற்கு பிறகு, அந்த இளைஞரையும் கொலை செய்ய முடிவு செய்தார் ஷியாம்ஜித்.. இதற்காகவே ஒரு கத்தியையும், சுத்தியலையும் தயார் செய்துள்ளார்.. சம்பவத்தன்று காலை விஷ்ணு பிரியாவின் வீட்டுக்கு சென்றார்.. அங்கு விஷ்ணுபிரியா மட்டும்தான் வீட்டில் இருந்தார்..

 கட்டிலில் பிணம்

கட்டிலில் பிணம்

அந்த இளைஞருடன், நெருக்கமாக போனில் பேசிக் கொண்டிருந்தார் விஷ்ணுபிரியா.. திடீரென கண்முன்னே ஷியாம்ஜித் வந்து நின்றதை பார்த்ததுமே விஷ்ணு பிரியா அலறியுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சுத்தியலால் தலையில் பலமாக அடித்து, பிறகு கத்தியாலும் கழுத்தை அறுத்தார்.. இதில் ரத்த வெள்ளத்தில் விஷ்ணுபிரியா சரிந்து விழுந்தார்.. இதை பார்த்ததுமே, உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய ஷியாம்ஜித், பைக்கில் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டார்.. பிறகு, வழக்கம்போல், தன்னுடைய அப்பாவின் ஓட்டலுக்கு சென்று வேலை பார்த்து கொண்டிருந்தார்.

 18+ காயங்கள்

18+ காயங்கள்

அப்போதுதான், போலீசார் ஓட்டலுக்குள்ளேயே புகுந்து அவரை கைது செய்தனர்.. ஒருவேளை போலீசார் சற்று தாமதமாக சென்றிருந்தாலும், விஷ்ணுபிரியாவின் காதலனையும் ஷியாம்ஜித் கொன்றிருப்பார் என்கிறார்கள்.. இதனிடையே, விஷ்ணு பிரியாவின் உடல் கண்ணூர் அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது... அவரது உடலில் பலமான 18 காயங்கள் இருந்ததாம்.. இறுதியில், விஷ்ணு பிரியாவின் உடல் அவரது வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஷியாம்ஜித்தை இப்போது ஜெயிலில் உள்ளார்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+