கேரளாவில் கைமீறிய நிலைமை.. தீயாய் பரவிய பறவை காய்ச்சல்.. ஒரே நாளில் 6,000 பறவைகள் அழிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வருவதால் கோட்டயம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6000க்கும் அதிகமான பறவைகளை சுகாதாரத்துறை ஊழியர்கள் அழித்துள்ளனர். தொற்று பாதிப்பு தீவிரமடைந்தால் மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கால்நடை மற்றும் கோழி பண்ணை வைத்திருக்கும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பொதுவாக செப்டம்பர் தொடங்கி மார்ச் மாதம் வரை இந்த பறவை காய்ச்சல் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பருவமழை மற்றும் குளிர் காலமான இந்த நாட்களில் பெரும்பாலான வெளிநாட்டு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வரும். இவ்வாறு வரும் பறவைகள் மூலம் இந்த தொற்று பரவுகிறது. இது மனிதர்களிடையே பெரிய அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும் கூட்டமாக வாழும் பறவைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நோய் பாதித்த பறவைகளை சாப்பிடும்போது விதிவிலக்காக சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும். எனவே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட உடனே இந்த பறவைகளுடன் மீதமுள்ள அனைத்து பறவைகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அழித்துவிடுவார்கள். அந்த வகையில் தற்போது கோட்டயத்தில் சுமார் 6,000க்கும் அதிகமான வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன.

கோட்டயம்
கோட்டயம் மாவட்டத்தின் மூன்று பஞ்சாயத்துகளில் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக்கரையில் 2,975 வாத்துகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல கேரளாவிலிருந்து லட்சத் தீவுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளில் பிரதானமானது கடல் உணவுகள்தான். இவ்வாறு இருக்கையில் கேரளாவிலிருந்துதான் பெரும்பாலான பறவை இறைச்சிகள் அங்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் பறவை காய்ச்சல் பாதிப்பையடுத்து இந்த ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளா
முதலில் ஒரு சில பண்ணைகளில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் திடீரென கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் இந்த பாதிப்பு பரவ தொடங்கியது. இதனையடுத்து நீர் நிலைகளில் இருந்த வாத்துகள் முதற்கட்டமாக அழிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கோழிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல இதற்கு முன்னர் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பறவைக் காய்ச்சல் பரவியது. இதனை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து நவம்பர் தொடக்கத்தில் செருத்தனாவில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை
கேரளாவில் இவ்வாறு தொடர்ச்சியாக பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தின் வாளையார், வேலாந்தவளம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு பயணிக்கின்றன. இவ்வாறு இருக்கும் நிலையில், பறவைகளை ஏற்றி வரும் வாகனங்களில் உள்ள பறவைகளுக்கு சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.

கறி கோழி
அதேபோல இந்த பகுதிகளின் வழியாக சராசரியாக 2 கோடி கிலோ கோழி கறி கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அங்கு பறவை காய்ச்சல் எதிரொலித்துள்ளதால் இந்த கறிகள் இங்கேயே தேக்கமடைந்துள்ளதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கறி கோழியின் விலை சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications