ரஜினிகாந்தை பார்த்ததும்.. சொல்ல சொல்ல கேட்காமல் கையில் கற்பூரம் ஏந்தி ரசிகர் செய்ததை பாருங்க!
திருவனந்தபுரம்: நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்படிப்பு தற்போது கேரளா மாநிலம் அட்டப்பாடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் காரில் நின்று வருவதை பார்த்த ரசிகர் ஒருவர் திடீரென்று தனது உள்ளங்கையில் கற்பூரத்தை வைத்து ஆரத்தி எடுத்தது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு ரிலீசானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கினார். இந்த திரைப்படம் ஹிட் அடித்தது.

இதையடுத்து ஜெயிலர் 2 திரைப்படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு என்பது தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. கேரளா மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடி என்ற இடத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்தை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் கருப்பு நிற காரில் நின்றபடி மெதுவாக வந்தார்.
ரஜினிகாந்தை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாகினர். ‛‛தலைவா.. தலைவா.. என்னை வாழ வைக்கும் தலைவா..'' என்று கோஷமிட்டனர். ரசிகர்களை நோக்கி சிரித்த ரஜினிகாந்த் கைகளை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். அதன்பிறகு ரசிகர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே தான் நடிகர் ரஜினிகாந்த் காரில் வந்ததை கவனித்த ரசிகர் ஒருவர் திடீரென்று கற்பூரம் கொளுத்தி அதனை தனது உள்ளங்கையில் வைத்து 3 முறை ஆரத்தி எடுத்தார். அதன்பிறகு கற்பூரத்தை கீழே போட்ட ரசிகர், ரஜினிகாந்தை நோக்கி தலைவா.. தலைவா என்று கோஷமிட்டு கும்பிட்டார். இதனை அங்கிருந்தவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அது தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ரசிகர் கையில் கற்பூரத்தை ஏந்தியபோது சூடும் அண்ணா என்று ஒருவர் கூறுகிறார். ஆனால் அதனை காதில் வாங்காமல் உற்சாகத்தில் ரசிகர் கற்பூரத்தை கையில் ஏந்தி ‛தலைவா.. தெய்வமே..' என்ற முழக்கத்துடன் ரஜினியை நோக்கி 3 முறை சுற்றி ஆரத்தி எடுத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கு ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். நடிகர் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மிர்னா மோகன் உள்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications