ஓம் க்ரீம் கம்! வீட்டுக்குள்ளிருந்து சத்தம்..தனியறையில் சிறுவர்களுடன் பெண் சாமியார்! கேரளாவில் ஷாக்!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் இருவர் கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அம்மாநிலத்தில் பந்தனம்திட்டா அருகே சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு பயன்படுத்திய பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் சிறுவர் சிறுமிகளை நரபலி கொடுக்க முயற்சித்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு பெண்களை நரபலி கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் நரபலி குறித்து அவர்கள் எதுவுமே பேசாத நிலையில் இதுபோல மேலும் பல கொலை சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் அவர்கள் வீட்டைச் சுற்றி தோண்டும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கேரள நரபலி
இந்நிலையில் கேரளாவில் நரபலி குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக சிறுவர்களுடன் தனியறையில் பூஜை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடத்தில் ஷோபனா என்ற பெண் சாமியார் தங்கி இருந்து பல வருடங்களாக மாந்திரிகங்கள் பூஜை என நடத்தி வருவதாக கூறப்படுகிறது இவர் பூஜை செய்யும் போதெல்லாம் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் சிறுமியர்களையும் அழைத்து வந்து பூஜை செய்வதோடு மாந்திரீகம் செய்யும்போது அவர்களை மயங்கி விழச் செய்திருக்கிறார்.

பெண் சாமியார்
மேலும் அடிக்கடி சிறுவர்களுடன் தனி அறையில் பூஜை செய்வதாக கூறி மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நரபலி சம்பவம் கேரளாவையே ஒலுக்கிய நிலையில் சோபனாவும் இது போன்ற சம்பவங்களில் ஏதும் ஈடுபடுகிறாரா என அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர்.

அதிரடி கைது
ஏற்கனவே கேரளாவில் நரபலி விவகாரம் பேசுபொருளாக இருக்கும் நிலையில் பெண் சாமியாரின் நடவடிக்கைகளால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பெண் சாமியார் ஷோபனா நடத்தி வந்த ஆசிரமத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் நள்ளிரவு பூஜைகளுக்கு சிறுவர் சிறுமிகளை ஷோபனா பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அங்கிருந்த சிறுவர் சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சூறையாடிய மக்கள்
அதோடு பெண் சாமியார் ஷோபனாவையும் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ளது போல இவரும் சிறுவர் சிறுமிகளை நரபலி கொடுத்து பூஜை நடத்தினரா என விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடைய பெண் சாமியார் நரபலி கொடுத்ததாக பரவிய தகவலால் அப்பகுதி மக்கள் அவரது மடத்தை சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications