ராமர் கோயில்.. மோடிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய இளைஞர்! அடுத்து நடந்த ட்விஸ்ட்.. இதை எதிர்பார்க்கலையே!
திருவனந்தபுரம்: கேரளாவிலிருந்து மெக்காவுக்கு நடந்தே சென்று பிரபலமடைந்த இளைஞர் ஒருவர், ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போஸ்டை கொஞ்ச நேரத்திலேயே டெலிட் செய்த அவர், அவ்வாறு பதிவிட்டதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் ஷிஹாப் சோத்தூர் என்ற இளைஞர் ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் மெக்காவுக்கு நடைப்பயணத்தை தொடங்கினார். கேரளாவிலிருந்து சாலை மார்க்கமாக மெக்காவுக்கு செல்ல 8,640 கி.மீ-ஐ கடக்க வேண்டும். தனது பயணத்தில் உறுதியாக இருந்த ஷிஹாப், 360 நாட்கள் முயற்சிக்கு பின்னர் வெற்றிகரமாக மெக்காவை அடைந்தார். இது மிகப்பெரிய சாதனை. இதற்காக இவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன. அப்போதிலிருந்து இவர் தேசிய வோல்கராக அறியப்படுகிறார்.

இவரது பேஸ்புக் சோஷியல் மீடியாக கணக்கிற்கு 7.71 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் அடுத்த நாளான 23ம் தேதி ஒரு பதிவை போட்டியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ராமர் சீதை வேடமணிந்த சிறுவர்களுக்கு நடுவே தான் நின்றுக்கொண்டிருக்கும் படத்தை பகிர்ந்து, "நன்றி மோடி சார். நான் ஒரு இந்திய முஸ்லீமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு கடுமையான எதிர்வினைகள் எழுந்திருந்தன.
இதனையடுத்து அடுத்த 1 மணி நேரத்தில் அந்த போஸ்ட்டை டெலிட் செய்த அவர், மன்னிப்பும் கேட்டு விளக்கமளித்திருந்தார். அதில், "சமீபத்தில் நான் நடத்திய ஒரு நிகழ்ச்சியை பதிவிட்டிருந்தேன். அதை அவர் லைக் செய்திருந்தார். பல தேசிய பிரபலங்கள் அதைப் பகிர்ந்துகொண்டது டிரெண்ட் செய்தனர். என்னைப் போன்ற ஒரு சாமானியனின் பதவிவை நாட்டின் பிரதமர் லைக் செய்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவிட்டிருந்தேன். அயோத்தி பிரச்னைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் ஒருபோதும் பாசிசத்திற்கு அடிபணிய மாட்டேன். ஆனால், நாம் நினைத்துக்கூட பார்க்காத வகையில் சமூக ஊடகங்கள் எதிர்வினையாற்றுகின்றன. உண்மை தெரியாமல் பலர் எதிர்வினையாற்றுகிறார்கள். அன்பிற்குரிய நபியை நேசிப்பவன் என்ற முறையில் நான் பாசிசத்தை ஆதரிக்கவில்லை. தவறான பதிவிற்கு வருந்துகிறேன், என்னை நேசிக்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது புதிய பதிவில் கூறியிருந்தார். இந்த விவகாரம் கேரளா முழுவதும் பெரும் விவாதங்களை தூண்டியுள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications