நம்பிக்கை துரோகம், கடன்! லாட்டரியில் ரூ.8.5 கோடி பரிசாக வென்ற கேரளா வேணுகோபால் என்ன சொல்றார் பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கு ரூ.8.5 கோடி லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. பல்வேறு துரோகங்களை சந்தித்த தனக்கு இந்த லாட்டரி பரிசுத்தொகை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், சமீபத்தில் வீடு கட்டும் போது நெருங்கிய நபர் ஒருவரே ஏமாற்றியதால் பெரும் நிதிச்சுமையை சந்தித்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
நேரம் வரும் போது தொட்டது துலங்கும் என்று பொதுவாக ஒரு பேச்சு வழக்கு உண்டு. அப்படித்தான் கேரளாவை சேர்ந்த வேணுகோபால் முளச்சேரி என்ற 52 வயது நபருக்கு வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறியிருக்கிறது. கடன் பிரச்சினைகளால் தவித்து வந்த வேணுகோபால், ஐக்கிய அரபு அமீரகத்தில் பிழைப்புக்காக வேலைக்கு சென்றுள்ளார்.

கேரள நபருக்கு 8.5 கோடி பரிசு
அஜ்மானில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக பணியாற்றி வந்த வேணுகோபாலுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 15 வருடங்களாக லாட்டரி வாங்கி வந்த அவர், என்றாவது ஒருநாள் நமக்கும் லாட்டரியில் பணம் அடித்துவிடாதா? கோடீஸ்வர் ஆகிவிட மாட்டோமா? என்று பகல் கனவு கண்டு இருக்கிறார்.
அவரது இந்த பகல் கனவு அப்படியே ஒரு வழியாக பலித்துவிட்டது. 15 வருடமாக கிடைத்த ஏமாற்றத்திற்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரே நாளில் வாழ்க்கையே திருப்பி போடும் அளவிற்கு பரிசுத்தொகை அடித்துள்ளது. அதாவது துபாய் லாட்டரியில் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அடித்துள்ளது. 8.5 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
15 ஆண்டுகளாக வாங்கியிருக்கிறார்
கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த வேணுகோபால், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அவ்வப்போது தனது குடும்பத்தினரை பார்க்க சொந்த ஊருக்கு வருவது வழக்கம். அப்படி ஊருக்கு வரும் போதெல்லாம் துபாய் விமான நிலையத்தில் லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார். 15 ஆண்டுகளாக இப்படி விமான நிலையம் வரும் போது எல்லாம் லாட்டரி வாங்கிய இவருக்கு ஒரு முறை கூட பெரிதாக பணம் படித்தது இல்லை.
ஆனாலும் என்றாவது ஒருநாள் லாட்டரியில் பணம் அடித்துவிடாதா? நாமும் கோடீஸ்வரர் ஆகிவிடமாட்டோமா? என நினைத்துகொண்டு லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார். இப்படித்தான் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி லாட்டரி வாங்கிவிட்டு கேரளாவுக்கு வந்துள்ளார். பின்னர் குலுக்கலை சமூக வலைத்தளம் வாயிலாக பார்த்து இருக்கிறார். அப்போதுதான் இவர் கண்களையே இவரால் நம்ப முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
நெருங்கிய நபரே ஏமாற்றினார்
ஆம்.. வேணுகோபால் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 1 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ.8.5 கோடி பரிசாக அடித்துள்ளது. நடப்பது கனவா இல்லை நனவா என ஒரு நிமிடம் திகைத்துப் போன வேணுகோபால், லாட்டரியில் பரிசு அடித்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார். கடன் மற்றும் பல்வேறு துரோகங்களை சந்தித்த தனக்கு இந்த லாட்டரி பரிசுத்தொகை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், சமீபத்தில் வீடு கட்டும் போது நெருங்கிய நபர் ஒருவரே ஏமாற்றியதால் பெரும் நிதிச்சுமையை சந்தித்தேன்.
தற்போது இந்த லாட்டரி பரிசுத்தொகை ஒரு மீட்பர் போல வந்துள்ளது. தற்போதுவரை இந்த பணத்தை எப்படி செலவிடுவது என முடிவு செய்யவில்லை. ஐக்கிய அரபு அமீரகம் எனது மனதிற்கு நெருக்கமான ஒன்றாக மாறிவிட்டது. விரைவில் அங்கு சென்று தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications