என்னாது நான் எல்கேஜி மாணவியா?.. பேஸ்புக்கில் விமர்சித்த பாஜக கவுன்சிலரை கிழித்த இளம் மேயர்
திருவனந்தபுரம்: தன்னை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலரை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்தே கிழி கிழினு கிழித்த இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளாவில் கடந்த நவம்பர்- டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் திருவனந்தபுரம் மேயராக தேர்வு செய்யப்பட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்யா ராஜேந்திரன். இந்தியாவின் இளம்வயது மேயர்களில் ஒருவரான ஆர்யா 21 வயதுடையவர்.
நாளைய இந்தியா இளைஞர்களின் கையில் என்பதற்கேற்ப இளம்பெண் மேயராக தேர்வு செய்யப்பட்ட போதே வாழ்த்துகள் குவிந்தன.

21 வயது பெண்
இந்த நிலையில் ஆர்யாவை, அவரது 21 வயதை வைத்து பாஜக கவுன்சிலர் ஒருவர் எல்கேஜி மாணவி என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு ஆர்யா அளித்த சரவெடி பதில் வைரலாகி வருகிறது. கடந்த 11 ஆம் தேதி பாஜக கவுன்சிலர் காரமானா அஜித் பேஸ்புக் பக்கத்தில் ஏகேஜி சென்டரில் இருந்து வந்த எல்கேஜி மாணவி என ஆர்யாவை விமர்சித்திருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதாவது ஏகேஜி சென்டர் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் ஆகும். இதையடுத்து ஜூன் 17 ஆம் தேதி கவுன்சிலர்கள் கூட்டம் திருவனந்தபுரம் மாநகராட்சி கட்டடத்தில் கூடியது. அப்போது காரமானா அஜித் மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்தார்.

அஜித்திற்கு சரமாரி
இதையடுத்து ஆர்யா ராஜேந்திரன், அஜித்திற்கு சரமாரி பதிலடி கொடுத்தார். அவர் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். கடந்த 6 மாதங்களில் நீங்கள் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளீர்கள். யார் வேண்டுமானாலும் இந்த சபையில் பேசலாம். ஆனால் நீங்கள் தனிப்பட்ட முறையில் எனது வயது, முதிர்ச்சி குறித்து விமர்சித்துள்ளீர்கள்.

பெருமை
இந்த வயதில் நான் மேயராகிவிட்டால் அதற்கேற்ப எவ்வாறு செயல்படுவது என்பது எனக்குத் தெரியும். அத்தகைய அமைப்பின் மூலம் நான் வளர்ந்தேன் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும் என்றார். அப்போது பாஜக உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். எனினும் தனது பேச்சை நிறுத்தாமல் மேயர் ஆர்யா தொடர்ந்தார்.

மோசம்
ஒரு பெண்ணை யார் அவமதித்தாலும் அது மோசமானது. நீங்கள் கொடுப்பதை மட்டுமே நீங்கள் திரும்பப் பெறுவீர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என ஆர்யா விமர்சித்தார். இதையடுத்து இவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications