பிராமணர்கள் தான் சபரிமலை கோயில் தீட்சிதர் ஆக வேண்டுமா? ஹைகோர்ட்டில் பிற ஜாதி தீட்சிதர்கள் வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிராமணர்கள்தான் தீட்சிதர்கள் ஆக முடியும் என்ற எழுதப்படாத விதிமுறைக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தீட்சிதர்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்
கேரளாவில் குறிப்பிட்ட காலம் வரை அனைத்து துறைகளிலும் மலையாள பிராமணர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது. கோயில்கள் முதல் அரசுத் துறைகள் வரை அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட இதே நிலைதான் அங்கு நீடித்தது. பிறகு கம்யூனிச, சோஷலிஷ சித்தாந்தங்கள் கேரளாவில் வலுப்பெறத் தொடங்கி, அரசியல் இயக்கங்களாகவும் மாறியதால் அனைத்து சமூகத்தினரும் அரசுத் துறைகளில் கால்பதிக்க தொடங்கினர். அதன் ஒருபகுதியாக, கோயில்களும் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டன.

வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை
கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், அவற்றை நிர்வகிக்கும் தேவசம் வாரியத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதனால் கேரளாவில் உள்ள கோயில்களில் பிராமணர்கள் மட்டுமே பூசாரிகள், அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். இதனை எதிர்த்து பல சட்ட ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக, கேரளாவில் உள்ள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தேவசம் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டில் நடவடிக்கை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் தற்போது கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

சபரிமலை கோயிலில் மட்டும்..
நிலைமை இப்படி இருக்க, கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மட்டும் பிராமணர்கள் மட்டுமே தலைமை தீட்சிதர் ஆக முடியும் என்ற நிலைமை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தீட்சிதர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், "தேவசம் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் ஓர் அறிவிக்கை வெளியிடப்படுகிறது. அதில் சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை தீட்சிதர் பதவியிடங்களுக்கு மலையாள பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

"அரசியல் சாசனத்துக்கு எதிரானது"
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தலைமை தீட்சிதர் பதவிக்கு விண்ணப்பிக்க கூறுவது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது ஆகும். அதுமட்டுமல்லாமல், இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் முரணானது ஆகும். எனவே, தேவசம் வாரியத்தின் இந்த பாரபட்சமான அணுகுமுறைக்கு தடைவிதிக்க வேண்டும்" என அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

"சட்டப்போராட்டம் ஓயாது"
இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேவசம் வாரியத்துக்கும், கேரள அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மனுதாரர்களின் ஒருவரான விஷ்ணு நாராயணன் என்பவர் கூறுகையில், "ஒருவரின் செயல்களை வைத்தே அவர் பிராமணராக மாறுகிறாரே ஒழிய, பிறப்பை வைத்து எவரும் பிராமணர் ஆவது கிடையாது. கேரளாவில் உள்ள பல கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகராகவும், தீட்சிதர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மட்டுமே தலைமை தீட்சிதர் பதவிக்கு பிராமணர் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இது ஜாதிய ரீதியில் இழைக்கப்படும் அநீதியாகும். இந்த நடைமுறை ஒழியும் எங்கள் சட்டப் போராட்டம் ஓயாது" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications