"நடுரோட்டில் ஏன் நின்னேன் தெரியுமா".. கெத்து காட்டிய கேரள பெண்.. 2019 அதிர வைத்த வீடியோ!
Recommended Video
திருவனந்தபுரம்: "ப்ளீஸ்.. யாரும் அந்த டிரைவரை திட்டாதீங்க.. அந்த டிரைவரால்தான் நான் உயிர் பிழைச்சேன்" என்று ராங்ரூட்டில் வந்த பஸ் டிரைவரை வழிமறித்து கெத்து காட்டிய கேரள பெண்ணை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் ஒரு வீடியோ வைரலானது.. கேரளாவின் பெரும்பாவூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில், அரசு பஸ் வந்துள்ளது. சாலைவிதிகளை மீறியபடி எதிர்புறத்தில் பஸ் வருவதை டூவீலரில் வந்த ஒரு பெண் பார்த்தார்.

பஸ் ராங் ரூட்டில் வருகிறது என்று தெரிந்தும், மற்ற வாகன ஓட்டிகள், பஸ்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி போனார்கள். ஆனால் இந்த பெண் மட்டும் அப்படியே நடுரோட்டில் பஸ்ஸுக்கு முன்னாடி நின்றார். இதை டிரைவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அந்த பெண் ஒதுங்கி போவார் என்று நினைத்து அப்படியே பஸ் எடுக்காமல் இருந்தார். ஆனால் பெண் அசரவே இல்லை. ரொம்ப நேரம் கழித்து, வேறு வழியில்லாமல் டிரைவர் பஸ்ஸை கிளப்பி கொண்டு சரியான வழியில் சென்றார். அதன்பின்புதான் அந்த பெண் அங்கிருந்து நகர்ந்தார்.
நடுரோட்டில் பஸ்ஸை மறித்து பெண் நின்ற இந்த வீடியோதான் அப்போது படுவைரலானது. இது சம்பந்தமாக சூர்யா மானீஷ் என்ற அந்த பெண் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியும் அளித்திருந்தார். அதில்,"இப்படி வீடியோ வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் டிரைவருக்கு சவால் விடுவதற்காக அப்படி நிற்கவில்லை.
அந்த வீடியோவில் கடைசி நேர காட்சிதான் இருந்தது. ஆனால், நான் அப்படி பஸ் முன்னாடி நிற்க ஒரு காரணம் இருந்தது. அந்த ரோட்டில் எனக்கு முன்னாடி ஒரு ஸ்கூல் பஸ் சென்று கொண்டிருந்தது. நான் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, எனக்கு முன்னால் ஒரு ஸ்கூல் பஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பஸ் இடது புறம் சென்று நின்றது.
அந்த நேரத்தில் பள்ளி பேருந்து திரும்பியபோது, நான் சென்ற சாலையில் எதிரே அரசு பஸ் ஒன்று இன்னொரு வண்டியை ஓவர்டேக் செய்து கொண்டு வந்தது. அப்போது அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே ஷாக் ஆகி நின்றேன். அந்த பஸ் வந்த வேகத்துக்கு எனக்கு என்ன வேணும்னாலும் ஆகியிருக்கலாம்.
When you are RIGHT it gives you a very different kind of MIGHT. See Joe a lady rider down South doesn't budge an inch to give in to an erring Bus Driver. Kudos to her. @TheBikerni @IndiaWima @UrvashiPatole @utterflea @anandmahindra @mishramugdha #GirlPower #BikerLife #BikerGirl pic.twitter.com/3RkkUr4XdG
— TheGhostRider31 (@TheGhostRider31) September 25, 2019
ஆனால் அந்த பஸ் டிரைவரால்தான் நான் உயிர் தப்பினேன். அவரை திட்டாதீங்க. அவர்தான் பஸ் வேகத்தை உடனே குறைத்து வலது புறமாக திருப்பி சென்றார். அப்பறம்தான் எனக்கு பயமே போச்சு. 7 வருஷமா வண்டி ஓட்டுறேன். இப்படியெல்லாம் இதற்கு முன்பு எனக்கு நடந்ததே இல்லை" என்றார். இதற்கு காரணம் எதுவானாலும், இந்த பெண்ணின் வீடியோ இந்த வருடம் வைரலாகி அனைவரையும் ஈர்த்ததை மறந்துவிட முடியாது!
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications