"பாலியல் அத்துமீறல்..:" மலையாள சினிமாவின் கொடூர முகம்! ஹேமா கமிஷனின் முழு ரிப்போர்ட் PDF இதோ
திருவனந்தபுரம்: ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது. காஸ்டிங் கவுச் முதல் பாலியல் சுரண்டல், பாகுபாடு என்று மோசமான ஒரு சூழலே நிலவுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக நாம் பார்க்கலாம்.
தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வந்த மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017இல் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சக மலையாள நடிகர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

ஹேமா கமிஷன்: இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது மட்டுமின்றி மலையாள சினிமாவில் பெண்கள் எதிராக இதுபோல பல மோசமான சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் வெளியானது. இதையடுத்து மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது.
அந்த கமிஷனின் ரிப்போர்ட்டின் ஒரு பகுதி இப்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட இந்த ரிப்போர்ட்டில் பல அதிர வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மலையாள சினிமாவில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. சூட்டிங் செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லை: சூட்டிங் செல்லும் இடங்களில் நடிகர்கள் ஹோட்டல் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது உட்பட பல மோசமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன. அங்கே நிலைமை இந்தளவுக்கு மோசமாக இருக்கும் போதிலும், பின்விளைவுகள், படத்தில் நடிக்கத் தடை போடுவார்களோ என்ற பயம், சமூகத்தின் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகப் பலரும் புகாரளிக்கத் தயங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சைபர் புல்லிங் மற்றும் இணையத்தில் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தீர்வு என்ன: இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்வு காண அதிகாரமிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த குழு உருவாக்கப்பட்டால் சினிமாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரிப்போர்ட்டை ஹேமா கமிஷன் சமர்ப்பித்துப் பல மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும், இதில் பல முக்கிய நடிகர்கள் குறித்த தகவல்கள் இருப்பதால் இதை வெளியிடாமல் கேரள அரசாங்கம் அதை நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹேமா கமிஷனில் விரிவாகக் கூறப்பட்டுள்ள விவரங்கள்:
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications