3.5 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற.. சரியான நேரத்தில் கை கொடுத்த மனிதாபிமானிகள்! மேலும் உதவுங்கள்
திருவனந்தபுரம்: தீவிர இதய நோயால் உயிருக்கு போராடும் மூன்றரை வயது குழந்தை தீப்தியின் உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள். ஏற்கெனவே நீங்கள் செய்த பங்களிப்பு காரணமாக தீப்திக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இன்னமும் குழந்தை முற்றிலுமாக குணமடைய உங்கள் உதவி தேவைப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் டேனியல். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் சாந்தினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. டேனியல் கட்டிட தொழிலாளி. வேலைக்கு சென்றால் ஒரு நாளைக்கு ரூ.800 சம்பளம் கிடைக்கும். ஆனால் ஆண்டின் எல்லா நாட்களிலும் வேலை என்பது நிச்சயம் கிடையாது.

மழை, வெயில் என எதுவும் பாராமல், சமூக பாதுகாப்பு கூட இல்லாமல் உழைத்தால்தான் இந்த சம்பளத்தை பெற முடியும். இந்த சம்பளம் போதாது என்பதால், சாந்தினி வீட்டு வேலைக்கு சென்று வந்தார். பாத்திரங்களை கழுவி, வீட்டை பெருக்கி சுத்தம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

வேலையில் என்னதான் கஷ்டம் இருந்தாலும், குழந்தை தீப்தியின் முகத்த பார்க்கும்போது கஷ்டமெல்லாம் பறந்து போய்விடும். ஆனால், தீப்தி மற்ற குழந்தையை போல அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. அடிக்கடி ஏற்படும் மூச்சு திணறல், சுவாச கோளறு, சோர்வு, காய்ச்சல் என குழந்தை எப்போதும் சுருண்டே படுத்திருந்திருக்கிறது. போகாத கோயில் இல்லை.. பார்க்காத கை வைத்தியம் இல்லை. எதுவும் கைக்கொடுக்கவில்லை. கடைசியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா மருத்துவமனைக்கு குழந்தையை பரிசோதனைக்காக பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

சோதனையில் குழந்தைக்கு தீவிரமான இதய பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தவறும் பட்சத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை, மருந்து உள்ளிட்டவற்றிற்கு ரூ.3-4 லட்சம் வரை செலவாகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் பெற்றோர்களால் நிச்சயம் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாது. எனவே அவர்களுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சிறு உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications