மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு! 10 வருடமாக கழிவுகளை கொட்டிய கேரளா! மாறி மாறி விழுந்த குட்டு! சம்மட்டி அடி
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவது கேரளாவிற்கு பெரிய சவுக்கடியாக மாறி உள்ளது. இத்தனை காலம் தமிழ்நாட்டை குப்பை தொட்டி போல பாவித்த அம்மாநில அரசுக்கு இது சம்மட்டி அடி என்றுதான் சொல்ல வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாயம், கேரளா உயர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாட்டு மக்கள் வரை கேரளாவிற்கு குட்டு வைத்துள்ளனர்.
கேரளாவின் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிரிஞ்ச்கள், பிபிஇ கிட்கள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்களில் கொட்டப்படுவது வழக்கமாகி வருகிறது. இதை தமிழ்நாடு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக எதிர்த்து வருகிறது. ஆனால் கேரளா தொடர்ந்து அண்டை மாநிலங்களை குப்பை தொட்டி போல பாவித்து வருகிறது.

இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கேரளா அரசின் நிர்வாக தோல்வியை இது காட்டுவதாக கேரள மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கேரளாவில் கொண்டு வரப்பட்டு தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பச்சு குரியன் தாமஸ் மற்றும் பி.கோபிநாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜனவரி 10-ம் தேதிக்குள் கழிவு மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகாவையும் கூட கேரளா குப்பைத்தொட்டி போல நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த முறை கேரளா கொட்டிய கழிவுகள் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. இதையடுத்து நெல்லையில் கடந்த 2 நாட்களில், கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட சுமார் 480 டன் மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது.
நெல்லையில் கடந்த 2 நாட்களில், கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட சுமார் 480 டன் மருத்துவ கழிவுகள் அகற்றம். நேற்று 18 லாரிகளிலும், இன்று 8 லாரிகளிலும் மருத்துவ கழிவுகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கழிவுகள் அகற்றப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. கழிவுகளை அகற்றும் பணி சற்று நேரத்தில் தொடங்கும் நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து 8 லாரிகள் வருகை இவ்விவகாரத்தில், ஏற்கனவே நெல்லையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய லாரியின் உரிமையாளர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சூப்பர்வைசர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பசுமை தீர்ப்பாயம் கண்டனம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலையீட்டைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் கழிவுகள் அகற்றப்பட்டன. டிசம்பர் 23-ம் தேதிக்குள் கழிவுகளை மீட்க கேரளாவுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கிட்டத்தட்ட 2010ல் இருந்தே தமிழ்நாட்டில் இப்படி கழிவுகளை கேரளா கொட்டி வருகிறது. கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து இதற்கு ஒருவகையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications