ஆஹா.. கேரளாவில் வீசுது "ராகுல்" அலை.. ஆனா பாஜகவுக்கும் மெகா இன்ப செய்தி.. வந்த பரபர சர்வே முடிவு
சிமதிருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறித்த சர்வே முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோல்கசபா தேர்தல் நடக்கிறது. முதல் கட்டம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு சில வாரம் மட்டுமே இருப்பதால் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அதேநேரம் மறுபுறம் சர்வே முடிவுகளும் வெளியாகி வருகிறது. இதற்கிடையே கேரளாவில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து இந்தியா டிவி நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
கேரளா: இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய இந்த சர்வே முடிவுகள் மாநிலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இந்த முறை பாஜகவும் கூட கணிசமான வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 20 சீட்கள் உள்ளன. இந்த 20 இடங்களில் அதிகபட்சமாகக் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் கூட்டணி 7 சீட்களை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அங்கே பாஜக கூட்டணி 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ்: கேரளாவில் கட்சி வாரியாக பார்க்கும் போது காங்கிரஸ் அதிகபட்சம் 7 இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 2 சீட்களையும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
இடதுசாரிகளுக்குக் கேரளாவில் இந்த முறை அதிர்ச்சி தான் கிடைக்குமாம். கேரளாவில் அவர்களால் 5 சீட்களை மட்டுமே பெற முடியும். அந்தக கூட்டணியில் உள்ள இந்தியன் கம்யூனிஸ்ட் மற்றும் கேரளா காங்கிரஸ் (எம்) தலா ஒரு இடத்தில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக அனைவருக்கும் ஷாக் தரும் வகையில் அங்கே 3 இடங்கள் பாஜக வசம் வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பாஜக: கேரளாவில் பாஜகவுக்கு எந்தவொரு வலிமையான முகமும் இல்லாத போதிலும் 3 இடங்கள் கிடைக்கும் என்று இந்த சர்வே முடிவுகள் கூறியுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
கேரளாவை பொறுத்தவரை அங்கே வரும் ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காங்கிரஸின் முகமான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நேரடியாக களமிறங்குகிறார். காங்கிரஸ் வெற்றி அததிகரிக்க இதுவு் ஒரு முக்கிய காரணமாகும்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும் கூட கேரளாவில் காங்கிரஸ் மட்டும் மிக பெரிய வெறறியை பதிவு செய்து இருந்தது. அந்த முறை கேரளாவில் 15 சீட்களை காங்கிரஸ் அள்ளியது. அப்போது அவர்கள் கூட்டணியில் இருந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது. அந்தத் தேர்தலில் பாஜக எந்தவொரு இடத்திலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications