Gender Dysphoria.. விமானம் ஓட்ட தடை.. டிஜிசிஏவுக்கு எதிராக இந்தியாவின் முதல் திருநம்பி விமானி வழக்கு
டிஜிசிஏ தன்னை விமானியாக தகுதியற்றவர் எனப் புறக்கணித்ததற்கு எதிராக கேரளாவில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இந்தியாவின் முதல் திருநம்பி விமானியான ஆடம் ஹாரி.
திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் திருநம்பி விமானியான ஆடம் ஹாரி, மருத்துவ பரிசோதனைகளைக் காரணம் காட்டி, டிஜிசிஏ தன்னை விமானியாக தகுதியற்றவர் எனப் புறக்கணித்ததற்கு எதிராக கேரளாவில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவரும் கல்வி, வேலைகளில் முன்னுரிமை பெறும் விதமாக, ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மூன்றாம் பாலினவத்தவரும் சமூகத்தில் தங்களுக்கென நல்லதொரு அங்கீகாரத்தைப் பெற்று வருகின்றனர். ஆனால் எல்லா சமயங்களிலும் இது சாத்தியமாகி விடுவதில்லை. இதற்காக பல்வேறு சோதனைகளை அவர்கள் கடக்க வேண்டி இருக்கிறது.
இந்தியாவின் முதல் திருநம்பி விமானியான ஆடம் ஹாரியின் சோகக்கதையும் அதில் ஒன்று. விமானியாக தகுதியற்றவர் என டிஜிசிஏ தெரிவித்ததையடுத்து தற்போது உணவு டெலிவரி செய்யும் நபராக வேலை பார்த்து வருகிறார் ஆடம் ஹாரி.

முதல் திருநம்பி விமானி
கேரளாவைச் சேர்ந்தவரான ஆடம் ஹாரி, கடந்த 2019ம் ஆண்டு 'இந்தியாவின் முதல் திருநம்பி விமானி' என்ற சிறப்பைப் பெற்றார். ஒரு வணிக விமானியாக ஆசைப்பட்ட அவருக்கு, கேரள அரசு நிறைய உதவிகளைச் செய்தது. ஆனால், சில ஹார்மோன் சிகிச்சையைக் காரணம் காட்டி, ஆடம் ஹாரி விமானியாக இருப்பதற்கு தகுதியற்றவர் என விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ அறிவித்தது.

பாலின வலியுணர்வு
விமானியாக ஆவதற்கென பல சோதனைகளை வைத்திருக்கிறது டிஜிசிஏ. அதில் மருத்துவ சோதனைகளும் ஒன்று. மற்ற சோதனைகளில் வென்று அடுத்த கட்டத்திற்குச் சென்ற ஆடம் ஹாரிக்கு, மருத்துவ சோதனை பிரச்சினையானது. அந்த பரிசோதனையில் ஆடம் ஹாரிக்கு Gender Dysphoria என்று சொல்லப்படும் பாலின வலியுணர்வு இருப்பதாகக் கூறப்பட்டது.

தகுதியற்றவர்
ஒரு நபர் தனது உயிரியல் (பெண்/ஆண்) பாலினம் மற்றும் பாலின அடையாளத்திற்கு இடையிலான பொருந்தாததன் விளைவாக உணரும் அமைதியின்மையே பாலின வலியுணர்வு எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இது ஒருவகை மனநோயாகவே கருதப்படுகிறது. எனவே, இதனைக் காரணம் காட்டி, ஆடம் ஹாரி விமானியாக தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.

தகுதியற்றவர்
ஒரு நபர் தனது உயிரியல் (பெண்/ஆண்) பாலினம் மற்றும் பாலின அடையாளத்திற்கு இடையிலான பொருந்தாததன் விளைவாக உணரும் அமைதியின்மையே பாலின வலியுணர்வு எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இது ஒருவகை மனநோயாகவே கருதப்படுகிறது. எனவே, இதனைக் காரணம் காட்டி, ஆடம் ஹாரி விமானியாக தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.

வழக்கு
ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், தன் பாலினத்தில் இருந்து பிற பாலினத்திற்கு மாறுகிறவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, இந்த சிகிச்சை முடிந்து ஆடம் ஹாரி மீண்டும் விமானியாவது என்பது எந்தளவிற்கு உறுதி என்று சொல்ல முடியாது. எனவே இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுக்க இருக்கிறார் ஆடம் ஹாரி.

வேண்டுகோள்
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கூடவே, வருமானத்திற்காக தற்போது உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்து வருவதாகவும், ஆனால் அதனை முன்னிறுத்தி, 'இந்தியாவின் முதல் திருநம்பி விமானி, தற்போது உணவு டெலிவரி செய்யும் வேலை செய்கிறார்' என்பதைத் தலைப்புச் செய்தியாக்க வேண்டாம்' என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

என் சமூகத்திற்கான போராட்டம்
மேலும், 'ஒவ்வொரு வேலையுமே தனித்துவமான கௌரவம் உடையதே. எந்தவொரு வேலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்றில்லை. நான் இப்போது எனது வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்காக மீண்டும் விமானியாக வேண்டும் எனப் போராடவில்லை. என் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக டிஜிசிஏக்கு எதிராக கேரளாவில் ஒரு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் ஆடம் ஹாரி. இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், ஆடம் ஹாரிக்கு ஆதரவாக கமெண்ட்களைப் பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications