ஒரு கோடிப்பே.. சுமை தூக்கும் தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஓணத்தில் கோடீஸ்வரர் ஆன ராஜேஷ்!
திருவனந்தபுரம் ; கேரள மாநிலம் கோட்டயம் அருகே கேரள அரசின் லாட்டரி டிக்கெட்டில் 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்ற மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தின் போது தடைவிதிக்கப்பட்டது சிலர் தங்கள் ஊழியத்தை பெரும்பாலும் லாட்டரி சீட்டுக்கு செலவிட்டு வருவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனாலும் தமிழகத்தில் தற்போது மறைமுகமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லாட்டரி மூணு நம்பர் லாட்டரி உள்ளிட்ட பெயர்களில் விற்கப்படும் இந்த லாட்டரி டிக்கெட் சட்டவிரோதமாக விற்கப்படுவது நடந்து வருகிறது.

கேரளாவில் லாட்டரி
ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி உள்ளது. தனியார் நிறுவனங்கள் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவது போலவே கேரள அரசு சார்பிலும் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஓணம் பண்டிகை ஒட்டி கேரள அரசு 1கோடி ரூபாய் பரிசு தொகை கொண்ட லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கியது.

ஓணம் பண்டிகை
லாட்டரி டிக்கெட் விலை 40 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் கேரளா லாட்டரி துறை சுமார் 5 லட்சம் லாட்டரி சீட்டுகளை அடைத்து விற்பனை செய்தது. அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் லாட்டரி டிக்கெட்டுகளை முடிவு மல்லபுரத்தில் வெளியிடப்பட்டது.

40 ரூபாய் டிக்கெட்
அதில் கேரள மாநிலம் மல்லபுரத்தைச் சேர்ந்தவருக்கு பரிசு விழுந்துள்ளது. மல்லாபுரம் பகுதியில் சுமை தூக்கும் வேலை செய்து வந்த ராஜேஷ் 40 ரூபாய்க்கு இந்த லாட்டரி சீட்டை வாங்கி இருக்கிறார் வேலைக்கு செல்ல தயாரான போது தான் அவருக்கு பரிசு வழங்க குறுஞ்செய்தி வந்துள்ளது. வரி, ஏஜெண்ட் கமிஷன் உள்ளிட்டவை போக அவருக்கு 77,99,890.54 ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

அதிர்ஷ்டம்
இதையடுத்து தனக்கு லாட்டரி சீட்டு விழுந்ததை உறுதி செய்து கொண்ட ராஜேஷ் பணத்தைக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஏழ்மையில் வாடிய எனக்கு இந்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், ஓணம் பண்டிகையின் போது இது எதிர்பாராத மாபெரும் அதிர்ஷ்டம் எனவும், இதனை வைத்து தன் குடும்பத்தினரை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்வேன் என ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications