மனைவி ரொம்ப குண்டு.. சுனிதா ஸ்லிம் பியூட்டி.. பத்திக்கிச்சு.. திரிஷ்யம் பாணியில் கொலை..சிக்கிய கணவர்
மனைவியை கொன்ற கணவன், தோழி கைது செய்யப்பட்டனர்
திருவனந்தபுரம்: "என் மனைவி வித்யா குண்டாக இருப்பாள்.. ஆனால் சுனிதா ஸ்லிம் & ப்யூட்டியாக இருப்பாள்.. பழைய காதல் எனக்கும் சுனிதாவுக்கும் பத்தி கொண்டது.. அதனால் த்ரிஷ்யம் பட பாணியில் வித்யாவை கொன்றோம்" என்று கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்.
கேரளா கோட்டையம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரேம்குமார் - வித்யா. போன 22ம் தேதி வித்யாவை காணவில்லை என்று பிரேம்குமார் உதயம்பூர் போலீசில் புகார் தந்தார். அதனால் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.
அப்போது வித்யாவின் செல்போன் சிக்னல் பீகார் இடத்தை காட்டியது.. அதனால் இது சம்பந்தமான விசாரணையில் போலீசார் இறங்கினர். இதனிடையே நெல்லையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு காட்டில் சடலத்தை வீசப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்தது. அது யார் என்ன என்று விசாரித்தால் காணாமல் போன வித்யா என்பது தெரியவந்தது.

அதிர்ச்சி
மனைவியை யாரோ கொன்றுவிட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலை பிரேம்குமாருக்கு சொல்ல போலீசார் முயன்றனர். ஆனால், பிரேம்குமார் வேறு ஒரு பெண்ணுடன் நெல்லையிலேயே குடும்பம் நடத்தி கொண்டிருப்பதை பார்த்ததும் அதிர்ந்தனர்.. அதனால் பிரேம்குமார் மீது சந்தேகம் எழுந்தது.. அவரது செல்போன்கள் மறைமுகமாக ஆய்வு செய்யப்பட்டன.

வாட்ஸ்அப்
அப்போதுதான் சுனிதா என்ற பெண்ணின் பெயர் அடிபட்டது. பிரேம்குமார் - சுனிதாவும் வாட்ஸ்அப்பில் பேசியது போலீசார் ரெக்கார்ட் செய்தனர். "சுனிதா.. நான்தான் கொலைகாரன்னு போலீஸ்காரங்க மோப்பம் புடிச்சிட்டாங்க.. அதனால வித்யாவை கொலை செய்ததை நானே போலீசில் சொல்ல போகிறேன்" என்றார்.

வாக்குமூலம்
இந்த ரெக்கார்ட்டை அடிப்படையாக வைத்து போலீசார் பிரேம்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது பிரேம் அளித்த வாக்குமூலம் இதுதான்: "நானும் சுனிதாவும் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்கள்... 96 பட பாணியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில்தான் திரும்பவும் சுனிதாவை பார்த்தேன்... ஸ்லிம்மாக, அழகாக இருந்தாள்.. எங்களுக்குள் பழைய காதல் பற்றிக் கொண்டது.

கொலை
அவளுக்கும் அவளது கணவரை பிடிக்கவில்லை.. எனக்கும் என் மனைவி வித்யாவை பிடிக்கவில்லை.. அதனால் நானும் - சுனிதாவும் இனி வரும் காலங்களில் சந்தோஷமாக வாழ முடிவு செய்தோம்.. ஆனால் வித்யா தடையாக இருக்கவும் கொலை செய்ய முடிவு செய்தேன்.. த்ரிஸியம் பட பாணியில் (தமிழில் பாபநாசம் படம்) கொலை பண்ண இருவரும் முடிவு செய்தோம்.

கழுத்தை நெறித்தோம்
வித்யா குண்டாக இருப்பாள்.. அதனால், உடம்பு குறைக்க ஒரு ஆயுர்வேத சிகிச்சை தருகிறோம் என்று என்று சொல்லி திருவனந்தபுரத்தில் ஒரு வில்லா-விற்கு அழைத்து சென்றோம்.. நள்ளிரவில் வித்யாவுக்கு மருந்து என்று மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தோம்.. மயங்கி விழுந்ததும், நானும், சுனிதாவும் வித்யாவை கழுத்தை நெறித்தோம்.. உடலை காரில் ஏற்றிக்கொண்டு, நெல்லை போனோம்.

செல்போன்
அங்கே ரோட்டோரம் கிடந்த ஒரு புதர்காட்டில் சடலத்தை வீசிவிட்டோம்.. போலீசாரை குழப்ப, வித்யாவின் செல்போனை பீகார் செல்லும் ரயிலில் போட்டுவிட்டோம். இப்போது 2 மாசமாக நானும் சுனிதாவும் ஒன்றாக குடும்பம் நடத்தி வருறோம்" என்றார். இதையடுத்து, சுனிதாவும், பிரேம்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 96' படம் பாதி... த்ரிஷ்யம் படம் மீதி நடந்த இந்த கொலை கேரளாவில் பரபரப்பை தந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications