கடன் பிரச்சினை.. கனவு வீட்டை விற்க நினைத்தவருக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசு!
கடன் பிரச்சினையால் வீட்டை விற்க நினைத்தவருக்கு, லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கடன் பிரச்சினையால் ஆசையாக கட்டிய வீட்டை விற்க நினைத்து கவலையில் இருந்தவருக்கு, கடைசி நேரத்தில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வாழ்க்கை எந்தவொரு நொடியிலும் சந்தோசமானதாக மாறும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு பலரது வாழ்க்கைச் சக்கரமே சுழன்று கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் அந்த நம்பிக்கை மெய்யாகி விடுவதில்லை என்றபோதும், ஒரு சிலர் இதில் விதிவிலக்கு.
ரூ. 45 லட்சம் கடனுக்காக ஆசை ஆசையாய் பார்த்துக் கட்டிய சொந்த வீட்டை விற்க நினைத்தவருக்கு, கடைசி நேரத்தில் லாட்டரியாய் அதிர்ஷ்டம் அடித்த கதை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புது வீடு
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பாவா. பெயிண்டரான இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சிறுவயது முதல் சேர்த்து வைத்த பணத்தோடு, வங்கிக்கடன் ரூ. 10 லட்சம், உறவினர்களிடம் ரூ. 20 லட்சம் கடன் என கடன் வாங்கி, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு புது வீடு ஒன்றைக் கட்டியுள்ளார் முகமது பாவா.

கடன் பிரச்சினை
2000 சதுர அடியில் கட்டப்பட்ட வீட்டில் தனது இரண்டாவது மகளின் திருமணத்தையும் சமீபத்தில் நடத்தியுள்ளார். இதனால் அவரது கடன் ரூ. 45 லட்சமானது. கடன் தொகை அதிகமானதால், அதைக் கட்ட முடியாமல் திணறி இருக்கிறார் முகமது பாவா. எனவே, ஆசையாக பார்த்துப் பார்த்துக் கட்டிய தங்களது வீட்டை அவர் விற்க முடிவு செய்துள்ளார்.

விற்க முடிவு
அதன்படி, தனது வீட்டை அவர் ரூ. 40 லட்சத்திற்கு விலை பேசிய பாவா, வீட்டை வாங்கும் நபரை கடந்த சில தினங்களுக்கு முன், மாலை 5 மணியளவில் பணத்தோடு வீட்டிற்கு வரச் சொல்லியுள்ளார். ஆசையாக கட்டிய வீட்டை விற்கப் போகிறோமே என்ற கவலையில் இருந்த முகமது பாவா, அன்றைய தினம் மதியம் வெளியில் சென்றபோது லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

ஒரு கோடி பரிசு
யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மதியம் 3 மணி குலுக்கலில் அந்த லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ளது. இதனால் முகமது பாவாவும் அவரது குடும்பத்தினரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தங்களது கனவு வீட்டை இரண்டு மணி நேரத்தில் விற்க வேண்டுமே என்ற கவலையில் இருந்த அவர்களுக்கு,ஒரே ஒரு லாட்டரி சீட்டில் வாழ்க்கையே மாறி விட்டது.

மகிழ்ச்சியில் உரிமையாளர்
"எங்களது பிரச்சினைகள் சரியாகும் என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு மாதங்களாக லாட்டரி வாங்கி வருகிறேன். வீடு கைமாறப் போவதற்கு சரியாக இரண்டு மணி நேரத்திற்குமுன்பு, இப்படி ஒரு பரிசு விழும் என நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. இனி என் வீட்டை விற்கப் போவதில்லை"என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் முகமது பாவா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications