திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறிய இடுக்கி.. எப்படி சாத்தியம்?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக இடுக்கி மாறிவிட்டது. இங்கு பாதிக்கப்பட்டிருந்த 10 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

Recommended Video

    கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறிய இடுக்கி

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9152 ஆக உள்ளது. அதுபோல் பலியானோரின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது. அது போல் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 376 பேராக உயர்ந்தது.

    இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இடுக்கியின் மூணாறில் தங்கியிருந்த பிரிட்டனை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அது போல் துபாயிலிருந்து திரும்பிய இளைஞர், காங்கிரஸ் பிரமுகருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துவிட்டனர்.

    கொரோனாவுக்கு 1000த்துக்கும் அதிகமான பேரை பலி கொடுத்த டாப் நாடுகள்.. அமெரிக்காவில் ரொம்ப அதிகம் கொரோனாவுக்கு 1000த்துக்கும் அதிகமான பேரை பலி கொடுத்த டாப் நாடுகள்.. அமெரிக்காவில் ரொம்ப அதிகம்

    5 பேர்

    5 பேர்

    காங்கிரஸ் பிரமுகரோடு தொடர்பிலிருந்த 5 பேர், டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய ஒருவர், அவரது மகள் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்கள் இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி கொரோனாவிலிருந்து 4 பேர் குணமடைந்துவிட்டனர்.

    இடுக்கி நிர்வாகம்

    இடுக்கி நிர்வாகம்

    மீதமுள்ள 3 பேரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இடுக்கி மாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    தடுப்பு நடவடிக்கை

    தடுப்பு நடவடிக்கை

    இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தவருக்குத்தான் கொரோனா பரவியது. அது போல் இந்தியாவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கேரளா இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் அங்கு செய்யப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கீழே இறங்கிவிட்டது.

    கொரோனா

    கொரோனா

    கான்டாக்ட் டிரேசிங், ரேபிட் டெஸ்ட் கிட் ஆகியவற்றால் நோய் பாதித்தவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள். அது போல் மக்களும் அரசின் உத்தரவை மீறி வெளியே வருவதில்லை. இதனால் அவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.

    English summary
    Kerala's Idikki District becomes Coronavirus free district after 10 patients were discharged from the hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X