Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயருக்கு தான் ரூ.10 கோடி..கேரள லாட்டரியில் முதல் பரிசு அடித்தவருக்கு கையில் இவ்வளவுதான் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள சம்மர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி இதுவரை வெளியே தலைகாட்டவில்லை. ரகசியமாக பரிசுத்தொகையை உரிமை கொண்டாட போய்விட்டாரா என கேரள மக்கள் முணுமுணுப்பதையும் பார்க்க முடிகிறது. ரூ.10 கோடி பரிசு அடித்தவருக்கு வரி பிடித்தம் எவ்வளவு போகும் என்று பார்ப்போம்.

கேரளாவில் லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.10 கோடி SG 513715 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு அடித்துள்ளது. பாலக்கட்டில் உள்ள லாட்டரி ஏஜென்சியாக உள்ள எஸ். சுரேஷ் (ஏஜென்சி எண்: P2267) என்பவர் விற்பனை செய்த லாட்டரிக்கு முதல் பரிசு அடித்துள்ளது. பரிசு அடித்து பல மணி நேரம் ஆகியும் லாட்டரியை வாங்கியது யார் என்று தெரியவில்லை.

kerala lottery Bumper lottery

அதிர்ஷ்டசாலி யார்?

இதனால், பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என தெரிந்து கொள்ள கேரள லாட்டரி பிரியர்கள், செய்திகள் எதாவது இது தொடர்பாக வருகிறதா என்று ஆர்வத்துடன் உள்ளனர். கேரள லாட்டரிகளில் மொத்தம் ரூ.10 கோடி வென்றவருக்கு முழு தொகையும் அப்படியே கொடுக்கப்படுமா? அல்லது வரி பிடித்தம் போகத்தான் இந்த தொகையா? என பலருக்கும் சந்தேகம் எழலாம். அதாவது ஒரு கோடி பரிசு அடித்தால் 31.15 சதவிகிதம் வரி போடப்படும்.

இதன்படி, 1 கோடி பரிசுத்தொகை வென்றிருந்தால் ரூ.31,20,000- வரி பிடிக்கப்படும். இதன்படி மொத்த தொகையாக ரூ.68,80,000 கிடைக்கும். இதை 10 கோடி என கணக்கு போட்டு பார்த்தால் சற்றேறக்குறைய 6.50 கோடி பரிசுத்தொகையே கிடைக்கும் என்று கேரள லாட்டரி பிரியர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. கேரளா லாட்டரியில் முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என இதுவரை தெரியவில்லை.

வெளி மாநிலத்தவருக்கு பரிசு?

தமிழக - கேரள பார்டர் எல்லை மாவட்டம் என்பதால், வெளி மாநிலத்தவர்களுக்கு கூட லாட்டரியில் பரிசு அடித்து இருக்கலாம் என்று லாட்டரி விற்பனையாளர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. சம்மர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு அடித்த அந்த அதிர்ஷ்டசலி யாராக இருக்கும் என ஆர்வத்துடன் இருக்கும் லாட்டரி பிரியர்கள்..இன்னொரு பக்கம் தங்கள் வீட்டில் உள்ள லாட்டரி டிக்கெட்டுகளை செக் செய்து கொண்டே இருக்கிறார்களாம்.

லாட்டரிகளால் ஏற்படும் பலனை விட பாதிப்புகள் ஏராளம் என்பதால் தமிழக அரசு லாட்டரிக்கு தடை விதித்தது. 2002 ஆம் ஆண்டு தடை விதித்தது. இதனால், தமிழகத்தில் கேரள லாட்டரிகளை விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். லாட்டரி டிக்கெடுகளுக்கு பெரிய தொகை பரிசு அடித்தால் அதை உரிய அடையள சான்றுடன் கேரள லாட்டரி துறையை லாட்டரி டிக்கெட்டை கொண்டு போய் கொடுத்து பரிசுத்தொகைக்கு உரிமை கோரலாம்.

ஆதார் கார்டு, பான் கார்டு, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், ரெவினியூ ஸ்டேப், உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டி இருக்கும். கேரளாவில் இன்று காருண்யா பிளஸ் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெறுகிறது. ரூ.40 மதிப்புள்ள இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.80,00,000 பரிசாக கிடைக்கும். இரண்டாவது பரிசு ரூ.10 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.1லட்சம் பரிசு அடிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+