கேரள ஓணம் பம்பர்.. ரூ. 25 கோடி முதல் பரிசு! லைப் டைம் செட்டில்மென்ட்.. யோகம் யாருக்கு அடிக்க போகுதோ
திருவனந்தபுரம்: கேரளாவில் மான்சூன் பம்பர் டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த வாரம் முடிந்த நிலையில் அடுத்த பம்பர் லாட்டரி அறிவிக்கப்பட்டுள்ளது. லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஓணம் பம்பர் லாட்டரிதான் அடுத்து விற்பனைக்கு வர உள்ளது. இந்த டிக்கெட்டின் விலை பரிசுத்தொகை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கேரளாவில் மான்சூன் பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.10 கோடி MC678572 என்ற எண்ணிற்கு விழுந்தது. கண்ணூர் மாவட்டம் பையனூரில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு பம்பர் பரிசு அடித்து இருந்தது. இந்த டிக்கெட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார்? என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை.

கேரள லாட்டரி டிக்கெட்
குலுக்கல் முடிந்து ஒருவாரம் ஆகியுள்ள நிலையில், பரிசுத்தொகை உரிமை கோரப்பட்டதா? ரகசியமாக பரிசுத்தொகையை டிக்கெட் வாங்கியவர் வாங்கி சென்றாரா? என்ற விவரமும் வெளியாகாததால் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் அதிர்ஷ்டசாலி யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஓணம் பம்பர் லாட்டரி
இது ஒருபக்கம் இருக்க கேரள லாட்டரி பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படும். நாட்டிலேயே லாட்டரி குலுக்கலில் கொடுக்கப்படும் மிகப்பெரிய தொகை இதுதான். இந்த டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும்.
இந்த டிக்கெட்டிற்கான விற்பனை ஓரிருநாளில் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. டிக்கெட்டிற்கான குலுக்கல் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. பம்பர் லாட்டரி டிக்கெட் மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்க கேரள லாட்டரி துறை திட்டமிட்டுள்ளது. இந்த பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடி மட்டும் இன்றி இரண்டாம் பரிசு ரூ1 கோடி அளிக்கப்படும். 20 டிக்கெட்டுகளுக்கு இரண்டாம் பரிசு அளிக்கப்படும்.
ரூ. 125 கோடி பரிசுத் தொகை
மூன்றாவது பரிசாக ரூ.50 லட்சம் அளிக்கப்படும். மொத்தம் 20 டிக்கெட்டுகளுக்கு இந்த பரிசுத்தொகை அளிக்கப்படும். 4 வது பரிசாக ரூ. 5 லட்சம் அளிக்கப்படும் எனத்தெரிகிறது. பரிசு விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் இது பற்றிய அறிவிப்பு வரும் எனத்தெரிகிறது. இந்த டிக்கெட் வழக்கமாக 10 சீரியஸ்களில் அச்சடிக்கப்படும்.
ஓணம் பம்பரில் முதல் பரிசுத்தொகைக்கு ரூ.2.5 கோடி ஏஜெண்ட் கமிஷனாக பிடித்தம் செய்யப்படும். இதுபோக வரி பிடித்தமும் செய்யப்படும். மொத்த பரிசுத்தொகை ரூ.125.54 கோடிக்கு அளிக்கப்படுகிறது. லாட்டரி விற்பனை மூலம் கேரள அரசுக்கு மொத்தமாக ரூ.351.56 கோடி கிடைக்கும். இதில், பரிசுத்தொகை போக மீதமுள்ள தொகை கேரள அரசுக்கு கிடைக்கும்.
வெளி மாநில லாட்டரி பிரியர்கள்
முதல் பரிசுத்தொகை ரூ.25 கோடி என்பதால் இந்த டிக்கெட்டை வெளி மாநில லாட்டரி பிரியர்களுடன் ஆர்வத்துடன் வாங்குவதை பார்க்க முடியும். கடந்த ஆண்டுக்கான ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக கர்நாடகாவை சேர்ந்த ஒரு மெக்கானிற்கு அடித்தது. TG 434222 என்ற எண்ணிற்கு கடந்த ஆண்டு அடித்தது. இது வயநாட்டில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ஆகும்.
கேரள லாட்டரி டிக்கெட்டுகளை லாட்டரிக்கு தடை செய்யப்பட்ட மாநிலங்களில் வைத்து விற்கவோ, வாங்கவோ அனுமதி கிடையாது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த டிக்கெட்டை விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும். தமிழக காவல்துறை விற்பனை செய்பவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கியது உறுதி செயப்பட்டால் கேரள அரசு டிக்கெட்டிற்கான பரிசுத்தொகையை வழங்குவதை மறுக்க முடியும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications