சேட்டன்களின் சேட்டை.. ஓணம் பண்டிகையில் மதுபானம் எவ்வளவு தெரியுமா? புதிய ரெக்கார்டு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.826.38 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 6.38 சதவீதம் அதிகமாகும். இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையால் கேரளா களைகட்டியது. அதேபோல் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

இந்நிலையில் தான் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கடந்த 10 நாட்களாக மதுவிற்பனை அதிகரித்தது. ஓணம் பண்டிகையையொட்டி நேற்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. முன்னதாகவே ஏராளமானவர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்து கொண்டனர்.
அதன்படி கடந்த மாதம் 28 ம்தேதி முதல் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வரை கடந்த 10 நாளில் கேரளாவில் விற்பனையான மதுபானம் குறித்த டேட்டா வெளியாகி உள்ளது., 'பெவ்கோ' எனப்படும், கேரள மாநில பானங்கள் கழகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‛‛
ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 25 முதல் நேற்று முன்தினம் வரையிலான 10 நாட்களில் ரூ.826.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு, 6.38 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.776.82 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. ஓணத்துக்கு முந்தைய நாளான உத்திராடம் நாளில் மட்டும் ரூ.137.64 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
இது கடந்தாண்டில், 126.01 கோடி ரூபாயாக இருந்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கொல்லத்தின் கருணாகப்பள்ளி மதுக்கடையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications