குழந்தை பிறந்துவிட்டது.. என்ன குழந்தைனு கேட்டவர்களுக்கு கேரள திருநங்கை தம்பதியின் பதில் இதுதான்
கேரளாவில் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை என்பதை சொல்லவில்லை.
திருவனந்தபுரம்: கேரளாவில் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை அவர்கள் இன்னும் கூறவில்லை.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்தவர் ஜியா பாவல், ஜஹாத் திருநங்கை தம்பதியான இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பாவல் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டியிருந்தார்.
அதில் ஜஹாத் 8 மாத கர்ப்பமாக உள்ளார். ஒரு குழந்தைக்கு தாய், தந்தையாக வேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நிறைவேற போகிறது. திருநங்கை ஒருவர் கர்ப்பமாகி இருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என பதிவிட்டிருந்தார்.

திருநங்கை
இந்த நிலையில் திருநங்கை தம்பதிக்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஜியா பாவல் நேற்று கூறுகையில், ஜஹாத்துக்கு அரசு மருத்துவமனையில் காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்தது. குழந்தையும் ஜஹாத்தும் நலமாக உள்ளார்கள்.

என்ன குழந்தை
என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தனர். ஜஹாத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். ஜியா ஆணாக பிறந்து பெண்ணாக மாறியுள்ளார். ஜஹாத் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜியா நடன கலைஞர். இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினர்.

நடைமுறை
ஆனால் இது நடைமுறையில் பல சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தனர். இதையடுத்த ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களாக இருப்பதால் தத்தெடுத்து வளர்ப்பதிலும் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜஹாத் ஆணாக மாறி இருந்தாலும் அவரால் கருத்தரிக்க முடியும்.

குழந்தை
குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என்ற செய்தியை இவர்கள் அறிந்தனர். இதையடுத்து நீண்ட யோசனைக்கு பிறகு தாங்கள் பெற்றோர் ஆகலாம் என முடிவெடுத்து ஊர் எது சொன்னாலும் பரவாயில்லை, தங்களுக்கு குழந்தை வேண்டும் என முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்து கொண்டனர்.

கருவுற தயார்
ஜஹாத்திற்கு உடலில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி விட்டனர். இதையடுத்து இருவரும் கருவுறுவதற்கான சிகிச்சையை தொடங்கினர். இந்த நிலையில்தான் இருவரும் கர்ப்பகால போட்டோஷூட்டை நடத்தி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். குழந்தை பிறந்ததும் தாய் பால் தானம் வழங்கும் வங்கியில் இருந்து பாலை பெற்று குழந்தைக்கு தரவிருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications