உணவில் கலந்து.. கணவனுக்கு 'ஸ்லோ பாய்சன்' கொடுத்த மனைவி.. அதுவும் 8 வருஷமா.. காரணத்தை பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவில் கணவனுக்கு சாப்பாட்டில் 8 வருடமாக மருந்து கலக்கி கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டார். இது மனநிலை பாதித்தவர்கள் சாப்பிடக்கூடிய மருந்து என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் சங்கர் (38). இவரது மனைவி ஆஷா (34). சதீஷ் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் புதிதாக வீடு வாங்கி அங்கு வசித்து வருகிறார்கள்.

செக்ஸ் டார்ச்சர்
கடந்த 2013-ம் ஆண்டு முதல் மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார் சதீஷ் சங்கர். உடலளவில் டார்ச்சர் செய்து வந்த அவர் மனதளவிலும் கொடுமை செய்து வந்துள்ளார். ஆஷா எவ்வளவோ எடுத்து சொல்லியும், கணவர் சதீஷ் திருந்துவதாக தெரியவில்லை. இந்த கொடுமையால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆஷா இதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தார்.

மனநிலை பாதித்தவர்கள் சாப்பிடக்கூடிய மருந்து
இதனை தொடர்ந்து சாப்பாட்டில் மனநிலை பாதித்தவர்கள் சாப்பிடக்கூடிய மருந்தை கணவர் சதீசுக்கு கலக்கி கொடுத்து வந்துள்ளார். அன்று முதல் சதீஷின் உடல்நிலை பாதிக்க தொடங்கியுள்ளது. அதாவது மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவுக்கு நிலைமை மோசமானது. கடந்த ஏழெட்டு வருடமாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் இவருடைய நோய் குணமாகவில்லை. மருத்துவமனையிலும் சரி செய்ய முடியாத அளவுக்கு நமக்கு என்ன பிரச்சினை வந்திருக்கும்? என்று சிந்திக்க தொடங்கினார் சதீஷ்.

உடல்நிலையில் பாதிப்பு
'சிறுது காலம் வீட்டில் சாப்பிடாமல் வெளியில் சாப்பிட்டால் என்ன' என்று நினைத்த அவர் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 20 நாள் வீட்டில் சாப்பிடாமல் மூன்று வேளையும் ஹோட்டலில்தான் சாப்பிட்டுள்ளார். இந்த 20 நாளும் அவரின் உடலில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போதுதான் வீட்டு சாப்பாட்டில் ஏதோ இருக்கிறது என்று அவருக்கு சந்தேகம் எழுந்தது.

உண்மையை போட்டுடைத்த தோழி
கடந்த வாரம் மனைவியின் தோழியை சந்தித்த சதீஷ், ''வீட்டில் சாப்பிடும் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 20 நாட்களாக வெளியே சாப்பிடும்போது உடல்நிலை பாதிப்பு இல்லை. என்ன காரணமாக இருக்கும்' என்று கேட்டுள்ளார். அதற்கு தோழி சொன்ன பதில் அவரை தூக்கிவாரி போட்டது.
''உங்களை கொலை செய்ய மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தை உணவில் கலந்து மனைவி உங்களுக்கு கொடுத்து வருகிறார். இதனால்தான் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

மனைவி மீது போலீசில் புகார்
நான் கொடுக்கும் மருந்தை உனது கணவனுக்கும் கொடு என எனக்கும் உங்களுடைய மாணவி அறிவுறுத்தினார். ஆனால் நான் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இப்போது இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது' என்று கூறி முடித்தார் மனைவியின் தோழி. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ், மனைவி மீது பாலா நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசில் ஷாக் தகவல்
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், ' தினசரி வன்கொடுமை செய்து வந்ததால் கடந்த 8 வருடமாக எனது கணவனுக்கு கொடுக்கப்படும் சாப்பாட்டில் மனநிலை பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்தை கலக்கி கொடுத்து வந்தது உண்மைதான் என மனைவி ஆஷா தெரிவித்தார்.

பெட்டி பெட்டியாக இருந்த மாத்திரைகள்
இந்த மாதிரி தினசரி கொடுத்தால் அவருடைய உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு விரைவில் இறந்து விடுவார் என்றும் அவர் சர்வசாதாரணமாக கூறினார். போலீஸார் வீட்டைபரிசோதனை செய்தபோது அங்கு அறையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளை பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications