ஒல்லியா அசிங்கமா இருக்கியே? அழகும் இல்லை, வேலையும் இல்லை.. இரவெல்லாம் அழுத மனைவி.. ஆடிப்போன கேரளா
திருவனந்தபுரம்: ஒல்லிக்குச்சி மாதிரி இருக்கியே? அழகா இல்லையே? என்று தோற்றத்தை கிண்டலடித்து கொண்டேயிருந்தாராம் கணவர்.. திருமணமாகி 2 வருடமான நிலையில், தினந்தோறும் மனைவியின் தோற்றத்தை விமர்சித்து கொண்டேயிருந்திருக்கிறார் கணவர்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜா. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.. கணவர் பெயர் பிரபின்.. மருத்துவமனை ஒன்றில் ஆண் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இரு வீட்டு பெற்றோர்களும் பார்த்து இந்த திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த திருமணத்தில் பிரபினுக்கு ஆரம்பத்திலிருந்தே விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது.. விஷ்ணுஜாவையும் அவருக்கு பிடிக்கவில்லை.
விஷ்ணுஜா: அதனால், திருமணமானதிலிருந்தே, விஷ்ணுஜாவை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் துன்பப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனம் நொந்துபோன விஷ்ணுஜா, கடந்த வாரம் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டார்.. தங்கள் மகளின் மரணத்துக்கு காரணம், கணவர் பிரபின்தான் என்று பெண் வீட்டினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் தற்போது கைதாகி உள்ளார்.
இதுகுறித்து விஷ்ணுஜாவின் அப்பா வாசுதேவன் சொல்லும்போது, "அசிங்கமாக இருக்கியே, ஒல்லியா இருக்கியே.. அழகும் இல்லை, வேலையும் இல்லை எனறெல்லாம் சொல்லி சொல்லியே, என் மகளை பிரபின் அடித்து கொடுமைப்படுத்தினார்.. இந்த உண்மை அவளது மரணத்துக்கு பிறகு நண்பர்கள் மூலமாகத்தான் தெரியவந்தது.
வேறொரு பெண்: தன்னுடைய கணவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்துவதை, எங்கள் யாரிடமும் அவள் சொன்னதில்லை.. பிரபினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் இப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது.. திருமணத்திற்கு பிறகு என் மகள் நிறைய தேர்வுகளை எழுதினாள், ஆனால் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. அவள் மிகவும் கடினமாக முயற்சித்து கொண்டிருந்தாள்.. ஆனால், அதற்குள் வேலை கிடைக்கவில்லை என்று டார்ச்சர் தந்திருக்கிறார்.

எங்கள் மகள் எங்களிடம் போனில் பேசக்கூட சுதந்திரம் இல்லை.. போனை ஸ்பீக்கரில் வைத்துவிட்டு தான் பேச வைப்பார்கள்.. என் மகள் இறந்துகிடந்தபோது, அவளது கழுத்தில் காயங்கள் இருந்தன.. அவரது 2 கைகளிலும் இருந்து ரத்தம் வழிந்தது.. எனது மகளை அவன் தான் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளான். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும்" என்றார்.
விசாரணை: இதையடுத்து, அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் கொடூரம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவலர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.. சஹானா மும்தாஜ் என்ற 19 வயது பெண், கல்லூரியில் படிக்கும்போதே, அப்துல் வஹாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வஹாப் அபுதாபியில் பணியாற்றி வருகிறார்.
நிறபேதம்: கல்யாணமாகி 22 நாட்களில் அப்துல் வஹாப் அபுதாபிக்கு கிளம்பி சென்று விட்ட நிலையில், சஹானாவின் தோற்றம், நிறத்தை வைத்து, மாமியார் வீட்டில் எந்நேரமும் குறை சொல்லி கொண்டே இருப்பார்களாம். இங்கிலீஷ் பேச்சுத்திறனையும் காரணம் காட்டி, மனம்புண்படும்படியாக பேசிவந்தார்களாம்.. கடைசியில் சஹானா, கடந்த பொங்கல் தினத்தன்று தூக்கில் தொங்கிவிட்டார். நிறபேதம் காரணமாக பெண்களின் தற்கொலைகள், கடவுளின் தேசத்தில் அதிகமாகி கொண்டிருப்பது அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications