கடுப்பான கேரள சேச்சி! கொதிக்கும் பாலை அதிகாரிகள் மீது ஊற்றிய பெண்.. கதிகலங்கிய போலீசார்! அம்மாடி
திருவனந்தபுரம்: ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரிகளைப் பார்த்துக் கடுப்பான பெண் ஒருவர் அவர்கள் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கடைகளை எல்லா இடங்களிலும் பார்க்க முடியும்.. இது சாலையில் செல்வோருக்குக் குறிப்பாகப் பாதசாரிகளுக்கு இது மிகவும் சிரமத்தைக் கொடுக்கும்.

இதனால் பொது இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே பெரும் போராட்டமாக மாறிவிடும்.
இதற்கிடையே கேரளாவில் அப்படி ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற இடத்தில் போலீசார் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே பதறி ஓட்டம் பிடித்த சம்பவம் ஒன்று நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரங்கேறியுள்ளது.
ஷாக் சம்பவம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் என்ற இடத்தில் தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கே சாலை ஓரத்தில் பெண் ஒருவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், நடைபாதையை ஆக்கிரமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. பொது இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இந்த கடையை அகற்ற அதிகாரிகள் சென்ற போது கடையை அகற்ற மறுத்து இந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற அந்த பெண் பட்டெனச் சூடான பாலை அவர் மீது ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தால் சுகாதார அதிகாரி, பேரூராட்சி அதிகாரிகள், போலீசார் என 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் செங்கனூர் நகரில் நடந்துள்ளது. அங்கே ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக டீக்கடை அமைக்கப்பட்டதாகப் புகார்கள் வந்தன. இந்தக் கடையை திட்டமேலைச் சேர்ந்த ராகி மற்றும் வரும் பிரசன்னா என இருவர் நடத்தி வந்தனர். புகார்களைத் தொடர்ந்து கடையை அகற்ற அதிகாரிகள் அங்கே சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கதிகலங்கிய அதிகாரிகள்: திடீரென கோபமடைந்த ராகி என்ற பெண் அங்கே கொதித்துக் கொண்டிருந்த பாலை அதிகாரிகள் மீது ஊற்றியுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் மிரண்டு போனார்கள். இது மட்டுமின்றி அங்கிருந்த தின்பண்டங்களையும் தூக்கி அதிகாரிகள் மீது வீசியுள்ளார். இதில் அவர்களில் சிலருக்குக் காயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில் அந்த அதிகாரிகள் கடை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால் கடையை அகற்றுமாறு கூறுகிறார்கள். இருப்பினும், அதை மறுக்கும் அந்த பெண், அவர்களை மிரட்டும் வகையிலும் திட்டியும் பேசுகிறார். மேலும், அங்கிருந்து செல்லாவிட்டால் அவர்கள் மீது பாலை ஊற்றிவிடுவேன் என்று மிரட்டுகிறார். இருப்பினும், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற ஆரம்பிக்கிறார்கள். அப்போது ஆத்திரமடைந்த அந்த பெண், அங்கே அடுப்பில் இருந்த பாலை அவர்கள் மீது வீசுகிறார்.
பரபரப்பு: இதனால் அங்கிருந்த அதிகாரிகள் தெறித்து ஓடினர். அதன் பிறகும் கூட விடாமல், அடுத்துக் கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து அதையும் அவர்கள் மீது வீசிவிடுவேன் என்று மிரட்டுகிறார். அப்போது சற்று அருகே வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை சமாதானம் செய்ய முயல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications