மலையாள பிக்பாஸ் 8-ல் நெஹாவின் காதல்.. பெற்றோர் நேராகவே வந்துட்டாங்க.. மோகன்லால் முன்பு நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், குடும்பத்தினர் நிகழ்ச்சி முடியும் வரை காத்திருக்காமல், இடையிலேயே வந்து தங்கள் மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம்தான் பிக் பாஸ் மலையாளம் சீசன் 8 நிகழ்ச்சியில் நடந்துள்ளது... இதன் பின்னணியில் இருப்பது ஒரு காதல் விவகாரம் என்பது அதைவிட ஹைலைட்டான விஷயம்.

பிக் பாஸ் மலையாளம் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் நெஹா பாத்திமா. இவருக்கும் சக போட்டியாளரான சந்தோஷ் ராஜ் என்கிற தாஷிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.. இதனால் 2 பேரும் காதலிப்பதாகவும் சோஷியல் மீடியாவில் அரசல் புரசலாக பேசப்பட்டது.

Malayalam Bigg Boss 8

பிக் பாஸ் மலையாளம்

ஆனால், தாஷி இன்னொரு போட்டியாளரான வேதாங்கியுடன் நெருக்கமாக பேசுவதாக மிருதுளா, நெஹாவிடம் சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு நெஹா அப்செட ஆகிவிட்டார்.. வேதாங்கியிடமும் நேரடியாக இது குறித்து கேள்வி எழுப்பினார்... தொடர்ந்து தாஷியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தாஷி தரப்பில், வேதாங்கி மீது தனக்கு காதல் இல்லை என்றும், அவரிடம் அப்படி நடந்துகொள்ளவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் நெஹாவுக்கு ஏற்பட்ட வருத்தம் மட்டும் ஏனோ குறையவில்லை. இதனிடையே, ஏற்கனவே மிருதுளாவிடம் பேசியபோது நெஹா மீது தனக்கு விருப்பம் இருப்பதாக தாஷியும் தெரிவித்திருந்தார்.

காதலை சொன்ன நெஹா

இந்த பிரச்சினைகளுக்கு பிறகு தாஷியிடம் தனது காதலை நெஹா வெளிப்படையாக தெரிவித்தார்... "நான் இப்படி செய்வது எங்கள் குடும்பத்துக்கு நிச்சயம் தர்மசங்கடமாக இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், ஒருவரை பிடிப்பது என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம். எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்பதைத்தான் சொல்ல வருகிறேன்.

நான் இங்கே இருக்கும்போது உன்னிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்த மாட்டேன்... இந்த வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகும் நம் 2 பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால், என் குடும்பத்தினருக்கு சம்மதம் என்றால் மட்டும் நாம் இதுபற்றி யோசிக்கலாம். என் குடும்பத்தினரை எதிர்த்து நான் எதுவும் செய்ய மாட்டேன். 2 குடும்பத்தினருக்கும் சம்மதம் இருந்து, நமக்கும் காதல் தொடர்ந்தால் வெளியே இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லலாம். அதுவரை இங்கே உன்னிடம் இருந்து முடிந்தவரை விலகியே இருக்க முயற்சி செய்வேன்" என்றெல்லாம் நெஹா கூறினார்.

மேடைக்கு வந்த பெற்றோர்

இந்த காதல் விவகாரம் நெஹாவின் குடும்பத்தினருக்கு தெரிந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடில் எதிர்பாராத ட்விஸ்ட் நடந்தது. வழக்கமாக நடைபெறும் Family Week-க்கு முன்பாகவே நெஹாவின் பெற்றோர் நிகழ்ச்சியின் மேடைக்கு வந்தனர்.

தொகுப்பாளர் மோகன்லால் நெஹாவின் பெற்றோரை மேடைக்கு வரவேற்றார். பெற்றோரை பார்த்த நெஹாவிடம் அவரது அப்பா, "நெஹா, உனக்கு எங்களை நினைவிருக்கிறதா? எங்களுக்கு அப்படி தோன்றவில்லையே" என்று கேட்டார்.

அதற்கு நெஹா, "ஏன் அப்பா, உங்களை எப்படி மறப்பேன்?" என்று பதிலளித்தார். ஆனால், "பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லையே" என்று அவரது தந்தை வேதனையுடன் கூறினார்.

கண்ணீருடன் பேசிய அம்மா

தொடர்ந்து நெஹாவின் அம்மா கண்ணீருடன் மகளிடம், "இங்கே மற்றவர்கள் எல்லோரும் அவர்களுடைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீ மட்டும் உணர்ச்சிகளில் ஃபீலிங்ஸில் மாட்டிக்கொண்டிருக்கிறாய். இதனால் மற்றவர்கள் உன்னை பயன்படுத்திக் கொள்கிறார்கள்... நாங்கள் வேண்டாம் என்று சொன்ன அதே விளையாட்டை நீ விளையாடிக் கொண்டிருக்கிறாய். ஏதோ ஒரு நம்பிக்கையை பிடித்துக் கொண்டு இருக்கிறாய் இல்லையா? இதனால் ஏற்படும் வலி எனக்கு 100 மடங்கு அதிகமாக இருக்கிறது" என்றார்.

மோகன்லால் உருக்கம்

பிறகு மோகன்லால் நெஹாவிடம், "நெஹா, நானும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாதான். ஒரு பெற்றோராக அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்குப் புரிகிறது. உன்னை பிக் பாஸ் வீட்டில் இருந்து அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவோடுதான் உன் பெற்றோர் இங்கு வந்திருக்கிறார்கள்" என்று மோகன்லால் கூறினார்.

இதனால் நெஹாவின் காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. பெற்றோரின் எதிர்ப்புக்கு பிறகும் தாஷி மீதான தனது விருப்பத்தை நெஹா வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இனி நெஹா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+