கேரள அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம்! நள்ளிரவு மது பார்ட்டி! அழிக்கப்பட்ட சிசிடிவி.. நடந்தது என்ன
திருவனந்தபுரம்: கேரள மாடல்கள் 2 பேர் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர்... இதே அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.. இவர்கள் 2 பேருமே நெருங்கிய தோழிகள்.. ஆன்சி திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.. அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர்..
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் - 4 நாட்களுக்கு கனமழை - குமரி, நீலகிரியில் மழை வெளுக்கும்
இந்நிலையில், அன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களின் நண்பர்கள் முஹம்மது ஆசிக் ஆகியோர் நவம்பர் மாதம் 1-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.

நண்பர்கள்
அப்போது இவர்களின் முன்னாடி ஒரு பைக் சென்று கொண்டிருந்தது. அந்த பைக் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக, காரை சட்டென்று திருப்பவும், கார் கட்டுப்பாட்டை இழந்தது.. தாறுமாறாக ரோட்டில் ஓடி, சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதியது... இதில் கார் அடியோடு நொறுங்கி அதில் இருந்த அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் இருவருமே உடல் நசுங்கி உயிரிழந்தனர். டிரைவர் உட்பட 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர்.

பதிவு
விபத்தில் இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு ஆன்சி பதிவிட்ட ஒரு இன்ஸ்டராகிராம் போஸ்ட் பொதுமக்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.. அந்த வீடியோவில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் ஆன்சி நடந்து செல்வது போல இருக்கிறது.. ''இது போவதற்கான நேரம்'' (It's time to go )" என்றும் பதிவிட்டிருந்தார்.. பல தரப்பினரையும் இந்த விபத்து அதிர்ச்சியை உண்டு பண்ணிய நிலையில், தங்கள் அஞ்சலியை சோஷியல்மீடியாவில் தெரிவித்தனர்.

உயிரிழப்பு
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முஹம்மது ஆஷிக் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்துல் ரஹ்மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து, அவர் ஓரளவு உடல்நலம் தேறி உள்ளார்.. விபத்து குறித்து போலீசாரும் தொடர் விசாரணையை நடத்தி வந்த நிலையில், அப்துல் ரஹ்மான் போதையில் கார் ஓட்டியது தெரியவந்தது... இதையடுத்து அப்துல் ரஹ்மான் வீட்டை போலீசார் அதிரடி சோதனை செய்ததுடன், அவரையும் கைது செய்தனர்.. அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது.

பார்ட்டி
அப்போது, கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 31-ம் தேதி இரவு டிஜே பார்ட்டியில் இவர்கள் அனைவருமே கலந்துகொண்டது தெரியவந்தது.. இதையடுத்து அந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.. அதில் 4 பேருமே ஹோட்டலுக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன... ஆனால் ஹோட்டலில் டிஜே பார்ட்டி நடந்த ஹாலில் பதிவான காட்சிகள் மட்டும் அழிக்கப்பட்டிருந்தது.

சந்தேகம்
இதுதான் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.. எதற்காக அந்த காட்சிகள் மட்டும் அழிக்கப்பட்டுள்ளது? அந்த ஹாலில் என்ன நடந்தது? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி விட்டுள்ளது.. ஏற்கனவே, அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் மது விருந்துகள் இந்த ஹோட்டலில் நடந்துள்ளதால், கடந்த மாதம் 23-ம் தேதியே ஹோட்டலுக்கு சீல் வைத்து விட்டார்களாம்.. ஆனால் 31-ம் தேதி மறுபடியும் அதே ஹோட்டலில் மதுவிருந்து நடந்துள்ளது..

திடீர் திருப்பம்
எனவே, இது வெளியில் தெரியாமல் இருப்பதற்காகவே, அந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அழிக்கப்பட்ட அந்த சிசிடிவி காட்சிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். டிரைவர் போதையில் வண்டியை ஓட்டியதும், ஹோட்டலில் மதுவிருந்தில் இவர்கள் கலந்து கொண்டதும், அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதும், இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.