Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"5000 பேருடன் உறவு.. அதுக்கு என்ன இப்போ?" கள்ள உறவை வசமாக பிடித்த மனைவி.. அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சீக்கிரமே தேர்தல் நடக்கும் சூழலில், அங்குள்ள அமைச்சர் ஒருவர் இப்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் கள்ள உறவில் இருப்பதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு அந்த அமைச்சர் காதல் இல்லாத நபரே உலகில் இல்லை என்றும் தனக்கு இதுபோல 5000 காதல் உறவுகள் இருப்பதாகச் சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சீக்கிரமே சட்டசபைத் தேர்தல் நடைபெ உள்ளது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் அங்குள்ள ஆளும் இடதுசாரிகள் உள்ளன. ஏற்கனவே, ஆளும் தரப்பு மீது எதிர்ப்பு கணிசமாக இருக்கும் சூழலில், இப்போது கேரள போக்குவரத்து அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Not one but 5 000 Love Affairs Kerala Minister Ganesh Kumar Bold Reply to his Wife allegations

என்ன நடந்தது!

கணேஷ் குமார் மனைவி பிந்து மேனன், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில் இருப்பதாக விமர்சித்துள்ளார். கடந்த சனிக்கிழமை தனது கணவரை வீட்டில் வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாகப் பிடித்ததாகவும், அப்போது அமைச்சரின் உதவியாளர்கள் தன்னைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், போலீசாரை கூட வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததாகவும் மேனன் குற்றம் சாட்டினார். 2014இல் திருமணம் ஆனதிலிருந்து தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் நிலவி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பெட் ரூமில் அசிங்கம்

மேலும் அவர் கூறுகையில், "நான் கடந்த இரண்டு மாதங்களாக வெளியூர் சென்றிருந்தேன்.. அவர் எனது செல்போன் நம்பரை பிளாக் செய்திருந்தார். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்து, கொல்லம் அருகில் உள்ள வலக்கத்தில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது படுக்கையறையில் நான் கண்டதை வார்த்தையால் சொல்ல முடியாது. பார்க்கவே கூடாத சிலவற்றை நான் கண்டேன். ஆதாரமாக வைத்திருக்க அதை நான் போட்டோவாக எடுத்தேன்.. ஆனால் அவரது ஓட்டுநர் என்னை தடுத்தார்.

இதனால் நான் உடனடியாக போலீசாருக்கு கால் செய்தேன். காவலர்கள் உடனடியாக வந்தபோதிலும், கணேஷின் உதவியாளர்கள் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.. மற்றொருபுறம் அந்த பெண்ணை அவர்கள் வெளியேற்றிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

முதல்முறை இல்லை

கணேஷ் குமார் இதுபோல சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை இல்லை. அவரது முதல் மனைவி யாமினி ஏற்கனவே குடும்ப வன்முறை குற்றச்சாட்டை முன்வைத்தே விவாகரத்து பெற்றிருந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகே, பிந்து மேனனை மணந்தார். தற்போது சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணியில் உள்ள அவர், பிந்து மேனனின் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியான காங்கிரஸின் தேர்தல் சதி என விமர்சித்தார்.

5000 பேருடன் உறவு

அப்போது ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் கணேஷ் குமார், தனக்கு 5,000 காதல் இருப்பதாகக் கிண்டலாகக் குறிப்பிட்டார். அவர் மேலும், "காதல் இல்லாதவர்கள் முட்டாள்கள். மேலும், மூளை இல்லாத பைத்தியக்காரர்கள் கூட போலீசாரை தொடர்பு கொள்ளலாம். எனது தனிப்பட்ட விஷயங்களில் யாரும் தலையிடக்கூடாது. நான் ஒரு நல்ல மக்கள் பிரதிநிதி மற்றும் எம்எல்ஏ. ஏழைகளுடன் நிற்பவன், ஊழல் மற்றும் மதவாதம் அற்றவன். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். காதலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், பின்னர் விளக்குகிறேன்.

மேலும், இந்தியாவில் பெரும் ஆளுமைகளும் கூட காதல் தொடர்பான விஷயங்களுக்காக டார்கெட் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிறகு மேலும், "கணேஷ் குமாருக்கு ஒன்று அல்ல, 5,000 காதல்கள் உள்ளன என்பதை நெட்டிசன்கள் புரிந்துகொள்ளட்டும்" என மீண்டும் தெரிவித்தார். இந்த விவகாரத்தைக் கேரளாவில் உள்ள காங்கிரஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. கேரளாவில் பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை எனக் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதிசன் சாடியுள்ளார்.

யார் இந்த கணேஷ்குமார்

ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரான கணேஷ் குமார், மறைந்த அவரது தந்தை ஆர். பாலகிருஷ்ண பிள்ளை நிறுவிய மாநிலக் கட்சியான கேரள காங்கிரஸ் (பி)ன் தலைவராவார். 2013இல் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகிய பிறகு, அவர் இடதுசாரி கூட்டணியில் இணைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறகு பிரனாயி விஜயன் அமைச்சரவையில் அவர் சேர்க்கப்பட்டார். 2023இல், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக சோலார் ஊழல் தொடர்பாக கணேஷ் குமார் எழுப்பிய பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சிபிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+