விவாகரத்து: ஓராண்டு காத்திருப்பு தேவையா? இது அரசியலமைப்புக்கு எதிரானது..கேரளா ஐகோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: ‛‛பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி வழக்கு தொடருபவர்கள் ஓராண்டு காத்திருப்பது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. திருமண பந்தத்தில் இணைந்தவர்களின் நலன் கருதி இந்தியாவில் ஒரே மாதிரியான திருமண சட்டம் கொண்டு வர வேண்டும்'' என மத்திய அரசுக்கு கேரளா உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் குடும்ப நல நீதிமன்றத்துக்கும் அதிரடியாக உத்தரவு போட்டது.
கேரளாவை சேர்ந்த இளைஞரும், இளம் பெண்ணும் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். திருமணம் ஆன புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
அதன்பிறகு சிறிது நாட்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமண வாழ்வை இணைந்து முன்னெடுக்க இருவரும் விரும்பவில்லை.

ஏற்க மறுத்த நீதிமன்றம்
இதனால் திருமண பந்தத்தை முடித்து இருவரும் பிரிய முடிவு செய்து பிரிந்தனர். மேலும் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து கோர விரும்பினர். இதையடுத்து அந்த தம்பதி பரஸ்பர விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் கூட்டு மனு தாக்கல் செய்தனர். மே மாதம் 31ம் தேதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்திய விவாகரத்து சட்டம் 1869ன்படி பிரிவு 10Aயின்படி திருமணம் ஆன பின் விவாகரத்துக்காக ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேலாக காத்திருக்க வேண்டும் என எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றம் கூறியது. இதையடுத்து அந்த தம்பதி கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதோடு இந்திய விவகாரத்து சட்டம் 1869 பிரிவு 10 A என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி தனியே ரிட் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் கருத்து
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ முகமது முஸ்டாக், ேஷாபா அன்னம்மா ஈப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சில முக்கிய விஷயங்களை கூறினர். இதுதொடர்பாக நீதிபதிகள், ‛‛பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோர திருமணமாகி ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு பிறகே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என விவாகரத்து சட்டம் 1869 பிரிவு 10 ஏ குறிப்பிடுகிறது. இது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானதாகவும் உள்ளது.

கருத்து வேறுபாடுகளை தீர்க்கவே சட்டம்
ஏனென்றால் திருமண தகராறுகளில் நீதிமன்றத்தின் உதவியுடன் கருத்து வேறுபாடுகளை தீர்க்க சட்டம் உதவ வேண்டும். தீர்வு சாத்தியமில்லை என்றால் மனுதாரர்களுக்கு எது நல்லது என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் முன்வைக்கப்படும் பிரச்சனை என்னவென்றால் காத்திருப்பு காலமாக தான் உள்ளது. இது தம்பதிக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே மாதிரியா சட்டம்
ஒரு மதச்சார்பற்ற நாட்டில் சட்ட உதவி என்பது மதத்தின் அடிப்படையில் இன்றி மக்களின் நலன் சார்ந்து இருக்க வேண்டும். இதனால் திருமணம் தொடர்பான பிரச்சனைகளில் துணைகளின் பொது நலனை கருத்தில் கொண்டு இந்தியாவில் ஒரே மாதிரியான திருமண சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குடும்ப நல நீதிமன்றத்துக்கும் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதன்படி விவாகரத்து தொடர்பான மனுவை குடும்ப நல நீதிமன்றம் விசாரித்து 2 வாரத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications