கவுன்சிலிங் கேட்ட மாணவி..வீட்டுக்குள்ளேயே போய் “ஃபாதர்”செய்த ச்சீ ச்சீ காரியம்..கேரளாவில் அதிர்ச்சி
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே மனநல ஆலோசனை பெற சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கும் முன்னர் நடைபெற்ற மிகப்பெரிய பாலியல் சம்பவமான " ஒய்ப் ஸ்வாப்" எனப்படும், மனைவிகளை மாற்றிக் கொள்ளும் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் கேரள மாநிலத்திலேயே அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக பாலியல் தொல்லை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அதிர்ச்சி
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவர் பள்ளியில் பாடத்தில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். முதலில் அவரை மிரட்டிப் பார்த்த பெற்றோருக்கு பின்னர் மாணவி மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோரை நேரில் வரவழைத்து பள்ளி நிர்வாகத்தினர் பேசியுள்ளனர்.

மாணவிக்கு மன அழுத்தம்
மாணவி ஏதோ ஒருவிதமான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் பயந்திருக்கலாம் என கருதிய பள்ளி நிர்வாகம் அவரை மருத்துவர் அல்லது பாதிரியார்களிடம் கவுன்சலிங் அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள மலங்கர ஆர்த்தோடக்ஸ் சிரியன் தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கும் பாண்ட்சன் ஜான் என்பவரிடம் மனநல ஆலோசனைக்காக அழைத்துச் சென்றனர். அன்று நீண்ட நேரம் மாணவிக்கு உளவியல் ஆலோசனையை பாதிரியார் ஜான் வழங்கியதாக கூறப்படும் நிலையில் நாளையும் மாணவியை கவுன்சிலிங்கிற்கு அழைத்து வருமாறு பாதிரியார் கூறியுள்ளார்.

பாதிரியார் பாலியல் தொந்தரவு
ஆனால் கவுன்சிலிங்கிற்கு தான் செல்ல விரும்பவில்லை என மாணவி கூறிய நிலையில் அதற்கு அடுத்த நாள் பாதிரியார் ஜான் மாணவியின் வீட்டுக்கே சென்று கவுன்சிலிங் வழங்க வேண்டும் எனக் கூறி மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. உளவியல் ஆலோசனையை தான் வழங்கி விட்டதாகவும் இனி மாணவி ஒழுங்காகப் படிப்பார் என கூறிய பாதிரியார் அங்கிருந்து சென்ற நிலையில் மாணவி அந்த அறையிலிருந்து அழுதபடியே வெளியே வந்துள்ளர். மேலும் மனநல ஆலோசனை வழங்குவதாக கூறி தன்னை தனி அறைக்கு அழைத்துச் சென்ற பாதிரியார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனது உடன் படிக்கும் மாணவியிடம் அந்த மாணவி கூறியுள்ளார்.

போலீசில் புகார்
பெற்றோரிடம் சொன்னால் தன்னை அடித்து விடுவார்கள் என கருதியதால் அந்த மாணவி தோழியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது இதையடுத்து மாணவியின் தோழி இதுகுறித்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆசிரியை தகவல் கொடுத்துள்ளார்.

பாதிரியார் கைது
இதையடுத்து பள்ளிக்குச் சென்ற அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் மனநல ஆலோசனைக்கு சென்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பாதிரியார் பாண்ட்சன் ஜான் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications