சபரிமலை சென்ற தமிழ் குடும்பம் மீது தாக்குதல்.. வேடிக்கை பார்த்த போலீஸ்.. அதிர்ச்சி!
கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயது பெண் ஒருவருடன் செல்ல முயன்ற தமிழ் குடும்பம் மீது சபரிமலை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயது பெண் ஒருவருடன் செல்ல முயன்ற தமிழ் குடும்பம் மீது சபரிமலை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதனால் அங்கு போராட்டம் வலுத்து இருக்கிறது.
சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் நடக்கிறது.

தமிழ் குடும்பம்
இந்த நிலையில் கோவிலுக்கு சென்னையில் இருந்து சென்ற தமிழ்நாட்டு தம்பதிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பழனி மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள். இதில் பஞ்சவர்ணத்திற்கு 40 வயதுதான் ஆகிறது என்பதால் அவரை வண்டியை விட்டு இறங்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர் வண்டியை விட்டு இறங்க மறுத்துள்ளார்.

தாக்கினார்கள்
இதையடுத்து அங்கு இருந்த இந்துத்துவா அமைப்பினர் அவர்கள் இருவரையும் தாக்கி இருக்கிறார்கள். கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி தாக்கி இருக்கிறார்கள். இதில் சில பெண்களும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் வேடிக்கை
இந்த நிலையில் போலீஸ் அந்த சம்பவம் நடக்கும் போது, அதை வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை போலீஸ் தடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள். போலீஸ் வேடிக்கை பார்த்த நிகழ்வு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் இப்படித்தான்
இதேபோல் நேற்றில் இருந்தே போலீஸ் அங்கு பாதுகாப்பிற்கு நிற்கவில்லை என்று தகவல் வருகிறது. அங்கு போராட்டக்காரர்கள் அத்துமீறும் போது போலீஸ் அமைதி காத்துள்ளது. அதேபோல் வலுக்கட்டாயமாக பெண்கள் இறக்கிவிடப்பட்ட போதும் போலீஸ் அமைதி காத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
-
திருச்செந்தூர் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் முறைகேடு .. புகாரில் சிக்கியவர்கள் நிம்மதி -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications