திணறும் இடதுசாரிகள்.. ஸ்கோர் செய்த பாஜக.. கேரளாவில் காவிக்கு கை கொடுத்த சபரிமலை!
கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்களில் பாஜகவிற்கு அரசியல் ரீதியாக பெரிய பலத்தை அளித்து இருக்கிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்களில் பாஜகவிற்கு அரசியல் ரீதியாக பெரிய பலத்தை அளித்து இருக்கிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. ஆனால் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் அங்கு போராட்டம் வலுத்து இருக்கிறது. அரசு போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இது இந்துத்துவா அமைப்புகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களை திரட்டினார்கள்
பாஜகவே இந்த சபரிமலை போராட்டம் இவ்வளவு பெரிதாக மாறும் என்று நினைக்கவில்லை. அந்த அளவிற்கு அவர்களுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தினமும் 10 ஆயிரம் பேர் வரை அவர்கள் தங்கள் போராட்டத்தில் திரட்டிக் காட்டினார்கள். அரசியல் கூட்டத்தில் கூட பாஜக இவ்வளவு பெரிய மக்களை சேர்த்தது கிடையாது.

ஆதரவு
அதுமட்டுமில்லாமல் பாஜகவிற்கு 20க்கும் அதிகமான அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. எல்லா இந்துத்துவா அமைப்புகளும் பாஜக என்னும் குடையின் கீழ் ஒன்றிணைந்து இருக்கிறது. இது அங்கு உள்ள இடதுசாரி அமைப்புகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த பழைய உணர்வு
முக்கியமாக பாஜக கேரளாவை சோமாலியா என்று சொன்னதும், வெள்ளத்தின் போது கைகொடுக்காததையும் அம்மக்கள் மறந்து விட்டதாகவே தெரிகிறது. பெரும்பாலான மக்கள் சபரிமலை பிரச்சனை காரணமாக பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்கள். இந்த நிலைபாடு தேர்தலிலும் தொடருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இடதுசாரிகள் திணறல்
அதே சமயம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் இடதுசாரிகள் திணறி வருகிறார்கள். முக்கியமாக கேரளா வெள்ளத்தின் போது நல்ல பெயர் எடுத்து அம்மாநில முதல் பினராயி விஜயன் மக்களின் எதிர்ப்பை கொஞ்சம் சம்பாதித்து இருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

கொஞ்சம் சாமர்த்தியம்
ஆனாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் அம்மாநில அரசு உறுதியாக இருக்கிறது. கடைசியாக பினராயி விஜயன் அளித்த பேட்டியிலேயே அது தெளிவானது. ஆனாலும் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் பெரிய நடவடிக்கை எடுக்காதது, வாகனங்களை மறிக்கவிட்டுவிட்டு போலீஸ் வேடிக்கை பார்த்தது என்று கொஞ்சம் மிதமான போக்கையும் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு கடைபிடிக்கிறது.












Click it and Unblock the Notifications