"கொலை மாஸ் சாரே".. இது கேரள மக்களின் வெற்றி.. பினராயி விஜயன் உருக்கமான டிவீட்!
திருவனந்தபுரம் : 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.
Recommended Video
சுயேட்சைகள் உள்ளிட்ட மொத்தம் 957 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஆளும் இடதுசாரி கூட்டணி 95 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும் 24 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த வெற்றியின் மூலம் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராகி உள்ளார்.

அதிகபட்சமாக பினராயி விஜயன் 50,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாளையே முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு பதவியேற்பு குறித்த விபரங்கள் வெளியிடப்பட உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
This victory belongs to the people of Kerala. I thank you all for reposing faith in the LDF once again. We need to come together more than ever before to tackle this pandemic and to take Kerala forward in the path of development, welfare and secularism!
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 2, 2021
இந்நிலையில் இந்த வெற்றிக்காக கேரள மக்களுக்கு அவர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், இந்த வெற்றி கேரள மக்களுக்கு சொந்தமானது. இடதுசாரி கூட்டணி மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொற்றுநோயை சமாளிக்கவும், கேரளாவை வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்லவும், நலம் மற்றும் மதசார்பின்மையை கடந்து நாம் ஒன்றுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications