டென்ஷனில் பாஜக.. புலம்பும் காங்.. கேரளா அரசுக்கு நெருக்கடி.. தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு கடிதம்
கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதி உள்ளது
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தீவிரமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அம்மாநிலத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது...
கடந்த வருடம் வரை கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தொற்று பரவல் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்தியா
இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதத்தில் ஆல்பா வைரஸ் அதிகளவில் பரவி இருந்தது தெரியவந்தது.. இதையடுத்து, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது... அந்த குழுவும், தொற்று அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டது..

நடவடிக்கை
ஏப்ரல், மே மாதங்களில் காப்பா என்ற புதிய வைரஸ் அதிகமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது... அந்த வகையில், ஜூன், ஜூலை மாதங்களில் வயநாடு, எர்ணாகுளம், காசர்கோடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டெல்டா வைரஸ் அதிகளவு பரவி இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது... தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகரிப்பு
எனினும், நேற்று முன்தினம் மட்டும் 31, 445 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது... இது நாட்டில் பதிவான மொத்த பாதிப்பில், 68.11 சதவீதமாகும்.. இதற்கு முக்கிய காரணம், ஓணம் பண்டிகையையொட்டி, ஊரடங்கில் கட்டுப்பாடுகளை கேரள மாநில அரசு தளர்த்தியதுதான் என்கிறார்கள்.. அதனால்தான் 17 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, இப்போது 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்றும், கொரோனா பாசிட்டிவ் விகிதமும், 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

எச்சரிக்கை
இது குறித்து கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் சொல்லும்போது, சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய ஆய்வின்படி மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 35 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தே தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.. அதனால் வீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விமர்சனம்
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்வோர், கட்டுப்பாடுகளை மீறுவதே பாதிப்பு அதிகரிக்க காரணம்... வீட்டில் தனிமைபடுத்த போதிய வசதி இல்லாதோர், அரசின் பராமரிப்பு மையங்களில் இருப்பதே அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு" என்றார்... ஆனால், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கேரள அரசு தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகளும், மருத்துவ நிபுணர்களும் கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

வைரஸ் பரவல்
''கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசின் அலட்சியமான செயல்பாடே பாதிப்பு அதிகரிக்க காரணமாகி விட்டது. வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர்" என்று பாஜகவை சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, பிரபல பொது சுகாதார நிபுணர் டாக்டர் எஸ்.எஸ். லால் உள்ளிட்டோரும் பினராயின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

செயலாளர்
இப்படிப்பட்ட சூழலில், கொரோனா பரவல் அதிகரிப்பதையடுத்து, கேரளா, மகாராஷ்டிரா அரசுகளுக்கு மத்திய அரசு ஒரு கடிதம் எழுதி உள்ளது... கேரள மாநில தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனா பரவல் மிகவும் உச்சத்தில் உள்ளது. நாட்டில் உள்ள கொரோனா பாதிப்புகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலைக்குரியது. ஓணம் பண்டிகைக்கு பிறகு சமீபத்திய பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

எண்ணிக்கை
மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்... கட்டுப்பாடுகளையும் இன்னும் அதிகரிக்க வேண்டும்... கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் என்னென்ன என்பதை கண்டறிந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்... கொரோனா பரிசோதனையை விரைவுப்படுத்துவதோடு, தடுப்பூசி போடும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதம்
இதே போல், மஹாராஷ்டிர மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்... அந்த கடிதத்தில், "மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது, இந்த ஒரு மாதமாக குறைந்து வருவது நல்ல அறிகுறி... ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது... அந்தப் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்து, தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications