திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இரவெல்லாம் அழுத விஸ்மயா.. ஆணியாலேயே குத்தி.. நாட்டையே உலுக்கிய மரணம்! கணவர் குற்றவாளி! கோர்ட் அதிரடி

விஸ்மயா வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என்று கொல்லம் கோர்ட்டு அதிரடியாக அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் விஸ்மயா.. கல்லூரி இறுதியாண்டு படித்து வந்தவருக்கு, கடந்த வருடம் திடீரென கிரண்குமார் என்ற மாப்பிள்ளையை பார்த்து வீட்டில் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

100 பவுன் நகை, டொயாட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான சீர்களை தங்கள் பெண்ணுக்கு தந்துள்ளனர்.. ஆனால், நாளுக்கு நாள் வரதட்சனை கொடுமை கணவர் வீட்டில் வெடித்துள்ளது..

விஸ்மயா விவகாரம்.. வரதட்சணை கொடுக்கவே மாட்டோம்.. வீட்டு வாசலில் எழுதி வைத்த கேரள பெண்கள் விஸ்மயா விவகாரம்.. வரதட்சணை கொடுக்கவே மாட்டோம்.. வீட்டு வாசலில் எழுதி வைத்த கேரள பெண்கள்

 ஆணியால் குத்தினார்

ஆணியால் குத்தினார்

கணவரின் கொடுமையான தாக்குதல்களுக்கு இளம் பெண் விஸ்மயா ஆளானார்... உடம்பெல்லாம் கட்டையால் அந்த பெண்ணை அடித்து தாக்கினர்.. ஆணியால் குத்தி சித்ரவதை செய்துள்ளார்.. இந்த விஷயம் எல்லாம் பெற்றோரிடம் சொல்லி பலமுறை அழுதிருக்கிறார் விஸ்மயா.. அவர்களும் என்ன செய்வதென்று கையை பிசைந்து, மகளுக்கு அறிவுரையும் ஆறுதலும் சொல்லி வந்தனர். ஆனால் ஒருகட்டத்தில், சித்ரவதையின் கொடுமை பொறுக்கமுடியாமல், மர்மமான முறையில் விஸ்மயா இறந்துவிட்டார்.

விஸ்மயா

விஸ்மயா

போலீசாரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.. விஸ்மயாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், விஸ்மயா தூக்கில் தொங்கி இறந்துள்ளது முதல்கட்டமாக தெரியவந்தாலும், தன் மகளை கிரண்குமார் அடித்து கொன்றுவிட்டதாக போலீசாரிடம் பெற்றோர் கதறி புகார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் மகளின் உடம்பில் இல்லை... கழுத்தில் காணப்படும் காயங்கள் கண்டிப்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக இல்லை என்று கூறிய பெற்றோர்கள், இது கொலைதான் என்று அடித்து சொன்னார்கள்.

 உடம்பெல்லாம் காயம்

உடம்பெல்லாம் காயம்

இறப்புக்கு முந்தையநாள்கூட, தேர்வுக்கு தன்னை கணவன் அனுமதிக்கவில்லை என்று, சொல்லி விஸ்மயா அழுததாகவும் சொன்னார்கள்.. அதுமட்டுமல்ல, தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட காயத்தையும் உறவினர்களுக்கு விஸ்மயா வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய தகவலையும் போலீசாரிடம் தந்தனர்.. இறப்புக்கு முன்பு, விஸ்மயா கதறி அழுத ஆடியோ மெசேஜையும் போலீசாரிடம் தந்தனர். இவைகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது..

வாக்குமூலம்

வாக்குமூலம்

இதனிடையே, விஸ்மயா கணவர் கிரண்குமார் போலீசில் சரண் அடைந்தார்.. இவர் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.. தனக்கு வரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி, அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும், அதனாலேயே மனைவியிடம் தகராறு வந்ததாகவும் போலீசில் வெளிப்படையாகவே வாக்குமூலம் தந்தார். இதையடுத்து, கிரண் குமார் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது..

 குற்றவாளி

குற்றவாளி

மேலும் இது தொடர்பான வழக்கு கொல்லம் கூடுதல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது.. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இன்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதில், கணவர் கிரண்குமார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக குற்றம் நிரூபணமாகியுள்ளது. எனவே, விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி

கனிமொழி

கேரளாவையே உலுக்கி எடுத்தது தான் விஸ்வமயாவின் வழக்கு.. இதற்கு பிறகும் அடுத்தடுத்த பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டனர்.. அதிகம் படித்த மாநிலமான கேரளாவில் வரதட்சணை பிரச்சனையால், பெண்கள் 3 பேர் தொடர்ந்து தற்கொலை செய்து இறந்தது இந்தியா முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதில், விஸ்மயாவின் மரணம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன், மாவட்ட அளவில் குடும்பப் பிரச்சினைகள் தீர்வு மையங்களை வலுப்படுத்தும்படி வலியுறுத்தியிருந்தார்.

 தண்டனை விவரம்

தண்டனை விவரம்

வரதட்சணை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், என அனைவருமே ஒருமித்த குரல் எழுப்பினர்.. இங்கு நம் திமுக எம்பி கனிமொழியும், கேரள சம்பவத்துக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியிருந்தார்.. தற்போது, விஸ்வமயா வழக்கில், கணவர் குற்றவாளி என்று தீர்ப்பு தந்திருக்கும் நிலையில், நாளைய தினம் தண்டனை விவரங்கள் எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அந்த தண்டனை நிச்சயம் வரதட்சணை கொடூரங்களுக்கு எல்லாம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!

English summary
vismaya case and husband kiran kumar husband convicted by kerala court விஸ்மயா வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X