விடிஞ்சா கல்யாணம்.. நள்ளிரவில் நுழைந்த பக்கத்து வீட்டுக்காரர்.. கதறிய மணமகள்.. ஒரே செகண்டில் கொடூரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. திருமண வீடு, ஒரே செகண்டில் மரண வீடாகி மாறி கதிகலங்கவைத்துவிட்டது. என்ன காரணம்?
திருவனந்தபுரம் அருகே உள்ளது கல்லம்பலம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ராஜூ... 63 வயதாகிறது.. இவரது மகள் ஸ்ரீலட்சுமி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞர் ஜிஷ்ணு.. இவருக்கும் லட்சுமிக்கும் பழக்கம் இருந்தது. இதில் இருவருமே நெருக்கமாக பழகினர்.. உயிருக்கு உயிராக காதலிக்கவும் துவங்கினர்.

லட்சுமி: ஒருகட்டத்தில் இருவருமே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.. இதனால், லட்சுமியின் அப்பா, ராஜூவிடம் நேரடியாகவே சென்று, ஜிஷ்ணு பேசினார்..
லட்சுமியை காதலிப்பதாகவும், அவரை தனக்கு திருமணம் செய்து தரும்படியும் வெளிப்படையாகவே தர கேட்டார்.. இதைக்கேட்ட ராஜு, மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்... அதேசமயம், அவசரம் அவசரமாக லட்சுமிக்கு, இன்னொரு இடத்திலும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார். குறுகிய நாட்களில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து, திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தார்.. நேற்றுதான் இவர்களது திருமணம் முடிவாகியிருந்தது.
அவசர அவசரம்: இதையெல்லாம் கேள்விப்பட்ட ஜிஷ்ணு ஆவேசம் அடைந்தார்.. நேர்மையாக சென்று பெண் கேட்டும், மறுத்ததுடன், பெண்ணுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்கிறாரே என்று ஆத்திரம் கொண்டார். அதன்படி, நேற்று அதிகாலையில், தன்னுடைய நண்பர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு, லட்சுமி வீட்டுக்குள் நுழைந்தார்.. வீட்டிற்குள் லட்சுமியும், அவரது அப்பா ராஜுவும் இருந்தனர்...
ராஜுவை பார்த்ததுமே கோபமடைந்த ஜிஷ்ணுவும், அவரது நண்பர்களும் சேர்ந்து ராஜூவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராஜூ, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே ஜிஷ்ணுவும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதனிடையே, ராஜூவின் அலறல் சத்தம் கேட்டு, உறவினர்கள் கதறிக்கொண்டே ஓடி வந்தனர். ராஜூவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கும் தூக்கி சென்றனர்.. ஆனால், வழியிலேயே ராஜூ இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்..
அதிரடி கைது: இந்த கொலை சம்பவம் குறித்து, கல்லம்பலம் போலீசில் புகார் செய்யப்படவும், அவர்கள் விரைந்து வந்து விசாரணையை துவக்கினர்.. ஜிஷ்ணு உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை அதிரடியாக கைது செய்தனர். லட்சுமிக்கு இன்று காலை 10.30 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது.. அதற்குள் வீடே ரணகளமாகிவிட்டது.
ராஜூவை தாக்கும்போது, லட்சுமியையும் கொடூரமாக தாக்கியிருக்கிறார் ஜிஷ்ணு.. அவ்வளவு ஆசையாக ஒரு வருடமாக காதலித்துவிட்டு, எப்படி இன்னொரு நபரை மணக்க சம்மதிக்கலாம்? என்று லட்சுமி மீது ஜிஷ்ணுவுக்கு கோபம் வந்துள்ளது.. நண்பர்களுடன் லட்சுமி வீட்டுக்குள் நுழைந்தபோது, நள்ளிரவு ஆகிவிட்டதாம்.. விடிந்தால் திருமணம் என்பதால், மணமக்கள் வீட்டினர், திருமண வேலைகளில் பிஸியாகவே வேலை பார்த்து வந்துள்ளனர்..
கொலைவெறி: கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. ஆரம்பத்தில், இந்த காதலர்கள் காதலிக்கும்போது, இருவருமே அவரவர் வீட்டில் சொல்லியுள்ளனர்.. இரு தரப்பிலுமே திருமணத்துக்கு சம்மதத்தையும் பெற்றுள்ளனர்.. இதையடத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு தரப்பிலும் முடிவாகியிருக்கிறது.. ஆனால், ஜிஷ்ணுவின் நடத்தை தொடர்பாக பல்வேறு புகார்கள், ராஜூக்கு வந்தவண்ணம் இருந்திருக்கிறது.. அதனால்தான், திடீரென காதல் திருமணத்தில் இருந்து பின்வாங்கினாராம்..
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications