பிறந்தமேனியாக வர சொன்ன கணவன்.. சொம்பில் "சிவப்பு நீரை" காட்டிய நண்பர்.. போலீசுக்கு ஓடிய பரிதாப மனைவி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மனைவியை ஆடையின்றி பூஜையில் உட்கார சொல்லி, கணவன் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் முக்கிய கோரிக்கை ஒன்றை போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், தாமரசேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தாமரசேரி போலீசில் புகார் ஒன்றை தந்திருந்தார். அந்த புகாரில் உள்ளதாவது:

kerala pooja wealth

"எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டபடியே இருந்தன. அதனால், இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பூஜை செய்ய வேண்டும் என்று என்னுடைய கணவர் என்னை வலியுறுத்தியவாறே உள்ளார்.

பரிகார பூஜை: குறிப்பாக பரிகார பூஜை செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளார். இந்த பூஜையை செய்ய தயாராக இருப்பதாக, அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பிரகாசன் என்பவர் தொடர்ந்து கூறிவருவதாகவும், எனவே என்னை நிர்வாண பூஜை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் கணவர் என்னை வற்புறுத்துகிறார். அதேபோல, கணவரின் நண்பர் பிரகாசனும் என்னையே பின்தொடர்ந்து பரிகார பூஜைக்கு சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்" என்று இளம்பெண் புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தாமரசேரி போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக, நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என பெண்ணின் கணவரை, சாமியார் பிரகாஷ் வலியுறுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சிறையிலடைப்பு: இந்த நிர்வாண பூஜைக்கு இளம்பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது. இதையடுத்து பெண்ணின் கணவர் மற்றும் பூஜைக்கு தூண்டிய பிரகாசன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இளம்பெண்ணின் தரப்பில் சொல்லும்போது, "எங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. ஆனால், என் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. இதனால் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது.

அப்போதுதான், என்னுடைய நண்பரான பிரகாசம் என்பவர் வீட்டுக்கு வந்தார்.. ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து வர சொன்னார்.. அதை எங்களிடம் காண்பித்து, ரத்தம் போல இருக்கிறது என்று சொன்னார். அந்த தண்ணீரில் அவர் சிவப்பு பொடியை கலப்பதை நான் பார்த்தேன்..

வாதநோய்கள்: அதேபோல, என்னுடைய கணவருக்கு 'பிரம்ம ரக்‌ஷஸ்' பிடித்திருப்பதாக என்னிடமும், எனக்கு வாத நோய் பிடித்திருப்பதாக என் கணவரிடமும் பிரகாசன் சொன்னார். இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமானால், நிர்வாண பூஜை செய்தால் மட்டுமே தீர்வு என்று என் கணவரிடம் சொல்லி உள்ளார்.

இதற்கு ஒத்துழைக்கும்படி என்னிடம் கணவர் கட்டாயப்படுத்தி வந்தார்.. இதுபோல பல இடங்களில் நிர்வாண பூஜை நடத்தியிருக்கிறாராம் பிரகாசன். நாளுக்கு நாள் கணவர், சாமியார் என இருவரின் தொல்லை அதிகரித்ததால்தான் போலீஸில் புகார் அளித்தேன்.

உடந்தை: கணவரும், அவரது நண்பரான பிரகாசனும் சிறையில் இருந்து வெளியே வந்தால் அவர்களால் எனக்கு ஆபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்... எனவே போலீஸ் பாதுகாப்பும் எனக்கு தந்தால் உதவியாக இருக்கும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் இளம்பெண்.

இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் படித்த மாநிலமாக, அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாநிலம் என்று சொல்லப்படும், கேரளாவில் ஏற்கனவே நரபலி, மாந்திரீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் பரவிக்கிடக்கிறது. இப்போது நிர்வாண பூஜை என்ற பெயரில் எத்தனை பெண்கள், இந்த சாமியாரால் வீழ்த்தப்பட்டுள்ளார்களோ தெரியவில்லை.. போலீசார்தான் விசாரித்து, இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்..!!

சிறையிலடைப்பு: இந்த நிர்வாண பூஜைக்கு இளம்பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது. இதையடுத்து பெண்ணின் கணவர் மற்றும் பூஜைக்கு தூண்டிய பிரகாசன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து இளம்பெண்ணின் தரப்பில் சொல்லும்போது, "எங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. ஆனால், என் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. இதனால் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது.

அப்போதுதான், என்னுடைய நண்பரான பிரகாசம் என்பவர் வீட்டுக்கு வந்தார்.. ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து வர சொன்னார்.. அதை எங்களிடம் காண்பித்து, ரத்தம் போல இருக்கிறது என்று சொன்னார். அந்த தண்ணீரில் அவர் சிவப்பு பொடியை கலப்பதை நான் பார்த்தேன்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+